Chemical Hair Straightening : அய்யோ அதிர்ச்சி.. ஹேர் ஸ்ட்ரைட்னிங் பண்றீங்களா? எச்சரிக்கும் நிபுணர்கள்..

ரசாயன ஹேர் ஸ்ட்ரைட்னர் பயன்படுத்தினால் கர்பப்பை புற்றுநோய் வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Continues below advertisement

ரசாயன ஹேர் ஸ்ட்ரைட்னர் பயன்படுத்தினால் கர்பப்பை புற்றுநோய் வரும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது ரசாயன் ஹேர் ஸ்ட்ரைட்னர் பயன்படுத்துவரவோடு ஒப்பிடுகையில் அதைப் பயன்படுத்தாதவர்களுக்கு கர்பப்பை புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் குறைவு என்று ஜர்னல் ஆஃப் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட் என்ற மருத்துவ இதழில் இடம்பெற்றுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசாயன ஸ்ட்ரைட்னரில் பேரபன், பிஸ்ஃபெனால் ஏ, மெட்டல்ஸ், ஃபார்மால்டிஹைட் போன்ற வேதிப் பொருட்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் ஹேர் டை, ப்ளீச், ஹைலைட்ஸ், பெர்ம்ஸ் சொல்யூஷன்களில் இல்லை என்று தெரிகிறது.

Continues below advertisement

நேஷனல் கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஆய்வறிக்கையில், ஹேர் ஸ்ட்ரைட்னர்களை பயன்படுத்தாத பெண்களில் 1.64% பேருக்கு 70 வயதுக்குப் பின்னால் கர்பப்பை புற்றுநோய் ஏற்படலாம். ஆனால் இந்த ஹேர் ஸ்ட்ரைட்னர் சொல்யூஷனை அடிக்கடி பயன்படுத்துவோரில் 4.05 சதவீதம் பேருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ல் இதுவரை உலகம் முழுவதும் 65,950 பேருக்கு கர்பப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக கறுப்பின பெண்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.
இது தொடர்பாக NIEHS தொற்றுநோய் பிரிவின் ஆராய்ச்சியாளர் சே ஜங் சாங் கூறுகையில், கறுப்பினப் பெண்கள் ஹேர் ஸ்ட்ரைட்னர் அல்லது ரிலாக்ஸர் ப்ராடக்ட்ஸை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதனால் இளம் வயதில் அவர்களுக்கு இந்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஹேர் ஸ்ட்ரைட்னரில் இருக்கும் ரசாயம் நேரடியாக கபாலம் வழியாக நேரடியாக உடலுக்குள் சென்றுவிடுகிறது. அதுவும் குறிப்பாக வெடிப்புகள், புண்கள் இருந்தால் அவற்றின் வழியாக சென்றுவிடுகின்றன. 2019ல் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் நிரந்தர ஹேர்டையில் உள்ள ரசாயனம் மார்பகப் புற்றுநோய் அல்லது ஓவேரியன் கான்சர் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறப்படிருந்தது கவனிக்கத்தக்கது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்பது கருப்பை வாய் அல்லது கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்று நோய் ஆகும். புற்று நோய் முற்றிய நிலைக்கு வரும்வரை அதனுடைய அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும். இந்த நோய் இருக்கையில் யோனியில் குருதிப்பெருக்கு ஏற்படுவதுடன், இடுப்புப் பகுதியில் வலி ஏற்படலாம்.

உடலுறவின் போது ஆண்களிடமிருந்து பெண்களுக்கு செல்லும் ஹூயூமன் பாப்பிலோனா வைரஸ் எனப்படும் HPV வைரஸ் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்துகிறது. பலருடன் பாலியல் தொடர்பில் ஈடுபடுவது, சிறு வயதிலேயே உடலுறவு வைத்துக்கொள்வது ஆகியவை கர்பப்பை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்திய பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் பொதுவான ஒரு நோயாக கருப்பை புற்றுநோய் இருந்து வருகிறது.

இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒவ்வொரு ஆண்டும் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது ஹெச்.பி.வி வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க சந்தைகளில் 2-, 4-, மற்றும் 9-HPV தடுப்பூசிகள் உள்ளன. பெண் குழந்தைகள் பருவமடைந்ததும் உரிய இடைவெளியில் தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் இந்த நோய் வராமல் தடுக்கலாம். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்கும்போது அவை சிறந்த விளைவுகள் கொடுக்கின்றன.
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola