பாம்பு என்ற சொன்னாலே பலருக்கும் ஒருவித பயம்தான். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... என்ற சத்தமே நம்மை நடுங்க செய்யும். இல்லையா? ஆனால், இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் பெண் ஒருவரின் உடலின் மீது பாம்பு படமெடுப்பது, அப்படியே அவரை கிராஸ் செய்து செல்வதும் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது. டிவிட்டரில் பலரும் இதற்கு “ என்னது இது? இப்படி சூழல் உங்களுக்கு நேர்ந்தால் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? என்றெல்லாம் கமெண்ட் செய்து இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
பாம்பு என்றதும் அனைவரும் நடுங்குவர் என்பதற்கு மாறாக இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது. இந்திய வனத் துறை அதிகாரி சுசந்தா நந்தா (Indian Forest Service Official Susanta Nanda) வெளியிட்டுள்ள வீடியோவில், வயல்வெளி தோட்டத்தில் பெண் ஒருவர் வேலைகளை முடித்துவிட்டு, மூங்கிலால் பிண்ணப்பட்ட கட்டிலில் படுத்து ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார். அருகில் கன்றுக்குட்டி புல் சாப்பிட்டு கொண்டிருக்கிறது.
கட்டிலில் படுத்துகொண்டிருக்கும் பெண் மீது நாகபாம்பு ஒன்று தலைய தூக்கி படமெடுத்து நின்றிருப்பதாக இருக்கிறது. இந்த வீடியோவை பார்பவர்கள் அய்யோ..எதாச்சும் விபரீதமாக ஆகிட்டான்னு பயந்து பார்த்து வருகின்றனர்.
கர்நாடகாவின் கல்புர்கி அருகே உள்ள மல்பா கிராமத்தில் உள்ள வயல்வெளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாம்பு தன்மீது செல்வதை அறிந்தும் அந்தப் பெண் அசையாமல் அப்படியே படுத்திருந்தது எப்படி? பயமா இருந்தும், நாகபாம்பு என்பதால் அப்பெண் வணங்கியிருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாகபாம்பும் அந்த பெண்னை எதுவும் செய்யலாமல், தாக்காமல் அமைதியாக சென்றுள்ளது. இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.
மேலும் வாசிக்க..
Karnataka Hijab case: ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கை செப். 5-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த உச்சநீதிமன்றம்..
Hardik Pandya: போர் கண்ட சிங்கம்.. யார் கண்டு அஞ்சும்?? ஹர்திக் பாண்ட்யாவின் வைரல் ட்வீட்