நடிகர் விஷ்ணு விஷால் - ராம் குமார் வெற்றிக் கூட்டணி மீண்டும் அடுத்த படத்துக்காக இணைவதாக செய்தி வெளியாகி உள்ளது.
முண்டாசுப்பட்டி ராட்சசன் கூட்டணி
நடிகர் விஷ்ணு விஷாலின் திரை வாழ்வின் ஆரம்பக் காலக்கட்டத்தில் அவருக்கு வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்த படம் ’முண்டாசுப்பட்டி’.
2014ஆம் ஆண்டு ராம் குமார் இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 2018ஆம் ஆண்டு மீண்டும் இணைந்த இதே கூட்டணி ராட்சசன் படம் மூலம் கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது.
மேலும் படிக்க: `மும்பை அண்டர்வேர்ல்ட் தாதாக்களால் வாய்ப்புகளை இழந்தேன்!’ - பாலிவுட் ரகசியம் சொல்லும் `காதலர் தினம்’ சோனாலி!
கோலிவுட்டில் இன்று வரை வெளியாகியுள்ள த்ரில்லர் பாணி படங்களில் ராட்சசன் தனி இடத்தைப் பிடித்து பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
இந்தியில் ரீமேக்காகும் ராட்சசன்
தெலுங்கைத் தொடர்ந்து தற்போது அக்ஷய் குமார் - ரகுல் ப்ரீத் ஹிரோயினாக நடிப்பில் இந்தப் படம் இந்தியில் வெளியாக உள்ளது. முன்னதாக விக்கி டோனர், அந்தாதூன் போன்ற ஹிட் படங்களில் நடித்த ஆயுஷ்மான் குரானா இத்திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், தொடர்ந்து அக்ஷய் குமார் உறுதி செய்யப்பட்டு இப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திரைப்படங்களின் ரேட்டிங் அப்டேட் செய்யப்படும் ஐஎம்டிபி தளத்தில், ராட்சசன் திரைப்படத்துக்கு அதிக ரேட்டிங் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Koffee with Karan: பிரபலங்களே ரெடியா? அத்தனையும் பெர்சனல் கேள்விகள்.. மீண்டும் வருகிறது `காஃபி வித் கரண்’!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்