Rocketry Day 2 BO Collection: தலைகீழாக திரும்பிய ரிசல்ட்.. இந்தியில் சக்கை போடு போடும் ராக்கெட்ரி.. வசூல் விவரம் இதுதான்..!

மாதவன் இயக்கி நடித்திருக்கும் ராக்கெட்ரி திரைப்படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

 

Continues below advertisement

மாதவன் இயக்கி நடித்திருக்கும் ராக்கெட்ரி திரைப்படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.

மாதவன் இயக்கி நடித்து தயாரித்திருக்கும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படம் கடந்த 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தப்படத்திற்கு முன்னதாக குறைவான திரையரங்குகளே கிடைத்த நிலையில், அது அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

கடந்த வெள்ளி நிலவரப்படி, ராக்கெட்ரி படம் தமிழில் 75 லட்சமும், இந்தியில் 90 லட்சமும், மலையாளத்தில் 4 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து விடுமுறை நாளான நேற்று இந்தியில் மட்டும் ராக்கெட்ரி திரைப்படம் 1.60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல தமிழில் தோராயமாக 1.28 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியில் ராக்கெட்ரி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதற்கு போட்டிப்படமாக வெளியிடப்பட்ட ஆதித்யா ராய் கபூரின் ராஷ்ட்ர கவாச் ஓம் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. 

Rashtra Kavach Om:
Day 1 – Rs. 1.25 cr
Day 2 – Rs. 1.20 cr
Total – Rs. 2.45 cr

Rocketry: The Nambi Effect:
Day 1 – Rs. 75 lakh
Day 2 – Rs. 1.25 cr
Total – Rs. 2 cr

பிரபல இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணனின் வாழ்கை கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் ராக்கெட்ரி நம்பி விளைவு. பாகிஸ்தானுக்கு இந்திய ஏவுகணை குறித்த பாதுகாப்பு ரகசியங்களை விற்றதாக அவர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதே படத்தின் கதை. நம்பி நாராயணனாக மாதவனும், அவரது மனைவியாக சிம்ரனும் நடித்திருக்கின்றனர். சிறப்புத்தோற்றத்தில் இந்தியில் ஷாருக்கானும், தமிழில் சூர்யாவும் நடித்துள்ளனர். 

 

 

 


 

Continues below advertisement