விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியல் நாளுக்கு நாள் கலகலப்பாக செல்வதால் ரசிகர்கள் அதனை கலாய்த்து வருகின்றனர். 


சமீபகாலமாக சினிமாவில் இடம் பெறும் காட்சிகள், பாடல்களை அப்படியே சீரியல்களில் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தினம் இடம்பெறும் சீரியல் ப்ரோமோவில் என்னென்ன பாடல்கள் இடம்பெறும் என அதீத எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலில் இன்றைய ப்ரோமோ காண்பதற்கு சிரிப்பலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 


கதைப்படி சீரியலின் ஹீரோ பூமி இரண்டு பொண்டாட்டிக்காரர். அவர் இரண்டு ஹீரோயின்களில் ஒருவரான முத்தழகை தான் முறைப்படி காதலித்து வருகிறார். அவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் திடீரென அங்கு வரும் அஞ்சலி தாலியை எடுத்துக் காட்டி, முத்தழகு உன் மனைவி என்றால் அப்ப நான் யார் என கேள்வியெழுப்ப பூமி இரண்டு பொண்டாட்டிக்காரர் குட்டு உடைகிறது. முன்னதாக மருத்துவமனையில் அஞ்சலி உடல்நிலை முடியாமல் இருந்தபோது ஆறுதலுக்காக அவருக்கு துணையாக இருப்பதற்காக பூமி அஞ்சலிக்கு தாலி கட்டி இருப்பார். 


அதன்பிறகு நடந்த பஞ்சாயத்தில் இருவரும் முறைப்படி பூமியுடன் வாழ வேண்டும் என கூறப்பட்ட இருவரையும் அவர் எப்படி சமாளிக்கிறார் என காட்சிகள் கலகலப்பாக வைக்கப்பட்டுள்ளது. சொல்லப்போனால் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம் பெறும் காட்சிகள் போன்றே இதிலும் இடம் பெற்றுள்ளது. நேற்று நடந்த எபிசோடில் முத்தழகை வயலில் விட பூமி காரை எடுத்து செல்லும் போது அஞ்சலியும் முன்பக்க சீட்டுக்காக முட்டி மோதினர். உடனடியாக பூமி மூவரும் ஒரே சீட்டில் பைக்கில் செல்வோம் என கூறி அழைத்து செல்கிறார். பின்னணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம் பெற்ற பாடல் ஓடியது. 


இந்நிலையில் இன்று நடக்கும் எபிசோடில் அஞ்சலி பூமி குளிக்கும் போது அவருக்கு உதவுவதாக கூறி பாத்ரூமுக்குள் சென்று முத்தழகை வெறுப்பேற்றுகிறார். இதனைக் கண்டு கடுப்பாகும் முத்தழகு பூமியிடம் ஆதங்கத்தை தெரிவிக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக துடைப்பம் தடுக்கி பூமியும், அவரை காப்பாற்ற சென்ற முத்தழகும் கட்டிலில் விழுந்து ரொமான்ஸ் செய்கின்றனர். அப்போது எதிர்பாராமல் அங்கு வந்த அஞ்சலி அதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். முத்தழகு அஞ்சலியை வெறுப்பேற்று விட்டோம் என மகிழ்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த சீரியல் எங்கே சென்று முடிய போகிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண