Ajith Video: ஓமனில் இருந்து சென்னை வந்தார் அஜித் - விரைவில் விடாமுயற்சி ஷூட்டிங்?

அஜித் பிறந்த நாளை ஒட்டி விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

Continues below advertisement

Ajith Video: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்காக தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்த அஜித் குமாரின் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

Continues below advertisement

விடாமுயற்சி:

தமிழ்  சினிமாவின் அதிகளவில் ரசிகர்களை கொண்ட முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் துணிவு படம் ரிலீசானது. படம் ரிலீசை தொடர்ந்து உலகளவில் தனது பைக் பயணத்தை அஜித் தொடங்கினார். பைக் ரேஸ் மீது ஆர்வம் கொண்ட இவர் கடந்த நில மாதங்களாக வடமாநிலங்களுக்கும் இருசக்கர வாகனத்திலேயே சுற்றுலா மேற்கொண்டார். அஜித் பைக்கில் சுற்றுலா செல்லும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதேநேரம் விடா முயற்சி அப்டேட் கேட்டு ரசிகர்கள் பதிவிட்டு வந்தனர். 

சென்னை வந்த அஜித்:

இதற்கிடையே கடந்த மே மாதம் அஜித் பிறந்த நாளை ஒட்டி விடா முயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித் தொடர்ந்து பைக் ரேசில் இருந்தார். இந்த நிலையில் ஓமனில் தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட அஜித் சென்னை திரும்பும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. 

சென்னை விமான நிலையத்திற்கு வரும் அஜித்தின் வீடியோவை ரசிகர்கள் டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர். மகிழ் திருமேனி இயக்கும் விடா முயற்சி படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஜி, மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களை தொடர்ந்து அஜித்துடன் மீண்டும் இணைந்து த்ரிஷா நடிக்க உள்ளார். இவர்களுடன் ஹூமா குரேஷி, இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசை அமைப்பதாக கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக ஆகஸ்ட் மாதம் விடா முயற்சி படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அஜித்திற்கு நெருக்கடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் அஜித் தனது சுற்றுலாவை முடித்து கொண்டு சென்னை திரும்பியுள்ளதால் விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க: AR Rahman concert: ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்ச்சியில் குளறுபடி - ஏ.சி.டி.சி. நிறுவனத்தின் 3 பேர் மீது வழக்குப்பதிவு

Sai Pallavi: ‘கேவலமான நோக்கம்’.. திருமண வதந்தி பரப்பியவர்களை வெளுத்து வாங்கிய சாய் பல்லவி!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola