தேவையான பொருட்கள்


கேழ்வரகு மாவு - அரை கப்,  தூளாக்கிய வெல்லம் - அரை கப்,  நெய் - 1 டேபிள் ஸ்பூன்,  முந்திரி பருப்பு - 5 ,   உலர் திராட்சை - 1 டேபிள் ஸ்பூன், கருப்பு எள் - 1 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - சிறிதளவு,  சுக்கு தூள் - அரை டீஸ்பூன்.


செய்முறை

வாய் அகன்ற பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தூளாக்கிய வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எள்ளை கொட்டி மிதமான தீயில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நெய்யில் முந்திரி பருப்பு, உலர் திராட்சையை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். கேழ்வரகு மாவையும் வாசனை வரும் வரை தீயாமல் வறுத்தெடுக்க வேண்டும்.

வறுத்த மாவை வெல்ல பாகில் கொட்ட வேண்டும்.  உலர் திராட்சை, எள், முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றையும் அதனுடன்  கொட்டி கிளறி இறக்க வேண்டும். சற்று சூடு ஆறியதும், இவற்றை கைகளால் பிடிக்க முடிந்த சூட்டில் லட்டுகளாக பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சத்தான, சுவையான ராகி லட்டு தயார். 


வெல்லம் பாகு தயாரிக்கும் முறை 


வெல்லம் எடுத்துள்ள அளவில் நான்கில் ஒரு பங்கு அளவு தண்ணீரை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில் வெல்லத்தை சேர்க்க வேண்டும். சிறிது நேரத்தில் வெல்லம் உருகி நுரை நுரையாக பொங்கி வரும். இப்போது ஒரு சிறிய  டம்ளரில் பாதியளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, வெல்லம் பாகை கரண்டியால் எடுத்து ஒரு துளியை அந்த டம்ளர் தண்ணீரில் விட வேண்டும்.


பாகு கரையாமல் முத்துப்போன்று தண்ணீருக்கு அடியில் சென்று நின்று விட்டால் பாகு கூடி விட்டது என்று அர்த்தம். ஒருவேளை பாகு தண்ணீரில் கரைந்து விட்டால் பாகு கூடவில்லை என அர்த்தம். மேலும் சில நிமிடங்கள் சூடுபடுத்த வேண்டும்.


கேழ்வரகில் உள்ள சத்துக்கள்


கேழ்வரகு அனைத்து பருவநிலையிலும் விளையக் கூடிய ஒரு பயிர். கேழ்வரகில் ஏராளமான சத்துக்கள் உள்ளதால்  இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என சொல்லப்படுகின்றது. 


கேழ்வரகில் கால்சியம் சத்து நிறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. பால் பொருட்களை விரும்பாதவர்கள் கேழ்வரகை சாப்பிடுவதன் மூலம் கால்சிம் சத்தை பெறலாம் என சொல்லப்படுகின்றது. இது  எலும்பு, பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுவதாக சொல்லப்படுகின்றது.


மேலும் படிக்க


Vanathi Srinivasan: காலில் விழுந்த வானதி சீனிவாசன்.. கடுப்பான பிரதமர் மோடி.. என்ன சொன்னார் தெரியுமா?


Lollu Sabha Jeeva: இஷ்டத்துக்கு அடித்துவிட்ட லொள்ளு சபா ஜீவா.. மாமிசம் சாப்பிட்டா இப்படியெல்லாம் நடக்குமா? அறிவியல் சொல்வது என்ன?