நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
’ஆர்யா 1’ தயாரிப்பாளர்
டோலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜூ. தற்போது விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் ’வாரிசு’ படத்தை இவர் தான் தயாரிக்கிறார். தெலுங்கு சினிமாவில் ’தில்’ எனும் படத்தின் மூலம் இணை தயாரிப்பாளராக அறிமுகமான ராஜூ அப்படத்தின் பெயரிலேயே தில் ராஜூ என இன்று வரை அழைக்கப்படுகிறார்.
தொடர்ந்து ஆர்யா 1, பொம்மரில்லு, சீத்தம்மா வகிட்டிலோ ஸ்ரீமல்லி செட்டு, ஃபிதா என பல வெற்றிப் படங்களை இவர் தயாரித்துள்ளார்.
முதல் மனைவி உயிரிழப்பு
தற்போது 52 வயதாகும் தில் ராஜூவின் முதல் மனைவி அனிதா கடந்த 2017ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு 2020ஆம் ஆண்டு வைக்யா எனும் பெண்ணை தில் ராஜூ இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவியுடன் தற்போது தில் ராஜூவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தில் ராஜூவுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த பெண்ணான ஹர்ஷிதா என்பவருக்கு ஓர் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், முன்னதாக தன் தாயை இழந்து வாடிய தந்தை தில் ராஜூவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஹர்ஷிதா தான் ஊக்குவித்தார் எனக் கூறப்படுகிறது.
ஷங்கர் - ராம் சரண் காம்போவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ’ஆர் சி 15’ எனும் தெலுங்கு படத்தையும் தில் ராஜூ தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:Vidyasagar Last rites: கணவரின் இறுதிச் சடங்கு: மகளுடன் சேர்ந்து சம்பிரதாயங்களை செய்து முடித்த நடிகை மீனா!
Nayanthara Jawan Shoot: நயன்தாராவின் பவுன்சர்கள் பத்திரிகையாளர்களை தாக்கினரா? வீடியோவால் பரபரப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்