மீனா கணவர் மறைவு :
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே செயலிழந்து இருந்தநிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கலா மாஸ்டர் விளக்கம் :
வித்யாசாகர் உடல் வீட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னதாக அங்கு அனைத்து ஏற்பாடுகளையும் முன் நின்று நடத்தியவர் நடன இயக்குநர் கலா மாஸ்டர். கலா மீனாவின் நெருங்கிய தோழி. இந்த திடீர் மரணம் குறித்து, யூ ட்யூப் சேனல் ஒன்றுடன் பகிர்ந்துகொண்ட கலா மாஸ்டர், “எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது. மீனாவின் கணவர் மிகவும் நல்ல மனிதர். யாரையும் புண்படும்படிக்கூட பேசமாட்டார்.முதலில் எல்லோரிடமும் பேச தயக்கம் காட்டினாலும் பழகிவிட்டால் அவ்வளவு அன்பாக இருப்பார். அவருக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டுவிட்டார். ஆனாலும் அந்த தாக்கம் சில மாதங்கள் கழித்து அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் கடந்த மூன்று மாதங்களாக நுரையீரல் பாதிப்பிற்காக சிகிச்சை எடுத்து வந்தார். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தோம். இப்படி எதிர்பாராத விதமாக மரணிப்பார் என எதிர்பார்க்கவில்லை , இரண்டு நாட்களுக்கு முன்னதாக கூட அவர் நன்றாகத்தான் இருந்தார்“ என்றார்.
கணவரை காப்பாற்ற போராடிய மீனா :
மேலும் பேசிய கலா மாஸ்டர் “மீனா தன்னுடைய கணவரை காப்பாற்ற ரொம்ப போராடினாள். கடந்த மூன்று மாதமாக கணவருக்காக அவ்வளவு போராடிய பெண்ணை நான் பார்த்ததே இல்லை. மருத்துவமனை அதைவிட்டால் கோவில் இப்படியாகவே இருந்தார் மீனா. மீனா ஆரம்பத்தில் அம்மா சொன்னதன் பேரில்தான் சாகரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு ஒருவர் மீது ஒருவர் அவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள். மீனா மிகவும் செல்லமாக வளர்ந்த பெண். ஆனால் இந்த இக்கட்டான சூழலை அவள் மிகுந்த பக்குவத்துடன் கையாண்ட விதம் எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இறுதிச்சடங்கு அனைத்தயும் தனது கணவருக்கு நான்தான் செய்வேன் என விடாப்பிடியாக இருந்தாள்.மீனா எப்போதுமே சிரித்த முகமாக இருப்பார் . அவளது அழுகையை எங்களால் பார்க்க முடியவில்லை” என தெரிவித்தார்
நைனிகாவுக்கு தெரியாது :
மீனாவின் மகள் நைனிகா நமக்கெல்லாம் பரீட்சியமானவர்தான் . 10 வயதாகும் நைனிகாவுக்கு அப்பா இறந்துவிட்டார் என்பது முதலில் தெரியாது. என்பதை ரியலைஸ் செய்யவே நேரம் எடுத்துச்சு. சிறிய பிரச்சனை காரணமாகத்தான் அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக நினைத்த நைனிகா அப்பா இறந்துவிடுவார் என எதிர்பார்த்திருக்க மாட்டார். நேற்று முதல் நைனிகா எதுவுமே சாப்பிடவில்லை. அவள் முகம் வாடியிருந்தது” என தெரிவிக்கும் கலா மாஸ்டர் நாங்கள் மீனாவிற்கு துணையாக இருப்போம் என ஆறுதல் தெரிவித்துள்ளார்.