தமிழ் மற்றும் மலையாள சினிமாவின் பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர். நுரையீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நேற்று (28/06/2022) இரவு சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இன்று சென்னை பெசன்ட் நகரில் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, உடலை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து வித்யாசாகர் அவர்களின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அப்போது உடன் சென்ற நடிகை மீனா, தனது கணவரின் உடலுக்கு இறுதிச் சடங்கினை தனது மகள் உடன் இணைந்து  செய்தார். 


கண்ணீர் மல்க, அவர் இறுதிச் சடங்கு செய்ததை கண்டு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், நடிகை மீனாவை தேற்ற முயன்றனர். உடைந்து போன அவர், சடங்குகளை செய்து முடித்து, தனது கணவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார். 


நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே செயலிழந்து இருந்தநிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல் போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி காலமானார். 


48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து, வித்தியாசாகரின் உடல் இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கணவர் வித்யாசகரின் உடலுக்கு நடிகை மீனா இறுதிச் சடங்குகளை தனது மகளுடன் செய்தார். இந்த காட்சி பார்ப்பவர்களுக்கு கண்ணீரினை வரவழைக்கும் விதமாக உள்ளது. 


நடிகை மீனா கணவர் வித்யாசாகரின்  மரணத்திற்கு பல திரைப்பிரபலங்கள் நேரில் சென்று நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நடிகை மீனா வீட்டிற்கு நடிகை ரம்பா முதல் ஆளாய் வந்தார். அவரை தொடர்ந்து நடன இயக்குநர் கலா மாஸ்டர், குணசித்திர நடிகை லட்சுமி உள்ளிட்ட பலரும் நேரில் சென்று துக்கத்தில் பங்கெடுத்து வருகின்றனர். மேலும், பலர் கொரோனா பரவல் காரணமாக இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக நடிகை மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண