Vijay TV Pugazh : அந்த சிரிப்ப பாருங்க... ரஜினிகாந்தை நேரில் சந்தித்த விஜய் டிவி புகழ்...வைரலாகும் புகைப்படங்கள்

சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் புகழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Continues below advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்கிற நிகழ்ச்சியில் அறிமுகமானவர் புகழ். பின் வடிவேலு பாலாஜி பரிந்துரை செய்து கல்லக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடியால் நிறைய பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். ஆனால் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் ஒருவராய் அவர் மாறியது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தான். வெவ்வேறு கெட் அப் போட்டி கோமாளியாக அவர் செய்த ரகளையை மட்டுமே மக்கள் இன்றும் ரிபீட் மோடில் பார்த்து வருகிறார்கள். 

Continues below advertisement

சின்னத்திரையில் பெரும் நட்சத்திரமாக மாறிய புகழ் வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்தார். சிக்ஸர் , கைதி , காக்டெயில் , சபாபதி , என்ன சொல்ல போகிறாய் என அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். காமெடியனாக மட்டும் இல்லாமல் தற்போது புதிய முயற்சியாக வில்லனாகவும் நடித்துள்ளார் புகழ். 

இப்படியான நிலையில் புகழ் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்தார். ரஜினியுடன் புகழ் மகிழ்ச்சிகரமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் புகழ் தன்னுடன் ஹீரோயினாக நடிக்க பலரை அனுகியதாகவும் ஆனால் அவர்கள் யாரும் சரியாக பதிலளிக்காதது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார் . தனது திறமைகளின் வழியே இவ்வளவு உயரத்திற்கு வந்துள்ள புகழ் சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்திற்கு  நிச்சயம் செல்வார் என ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். இப்படியான நிலையில் ரஜினியுடனான அவரது புகைப்படம் அனைவருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

வேட்டையன்

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த.செ ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், அபிராமி  , ரக்‌ஷன் உள்ளிட்டவகள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.


மேலும் படிக்க : Vasanta balan : அது ஒரு பொழுதுபோக்கு படம்...ஆஸ்கருக்கு அனுப்பிய படத்தை இப்படி சொல்லிட்டாரே வசந்தபாலன்

Mohan G : பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக பேட்டியளித்த இயக்குநர் மோகன் ஜி கைது

Continues below advertisement
Sponsored Links by Taboola