ஜோதிடத்திற்கு வைத்திருந்த கிளியை பறித்து வனத்துறையினர் தங்களை அடிக்கின்றனர். கிளி ஜோதிடர்களுக்கு மாற்று தொழில் செய்ய அரசு மூலமாக கடனுதவி வழங்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் கோரிக்கை மனு.

 

கிளிகளை வனத்துறை பறிமுதல் செய்துவிட்டதால்  தாங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம்

 

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு குறவர்கள் பேரவை சார்பில் மனு ஒன்று அளித்தனர்..,” அதில் வனத்துறை அதிகாரிகள் ஜோதிடத்திற்கு பயன்படுத்தப்பட்ட கிளிகளை வனத்துறை பறிமுதல் செய்துவிட்டதால்  தாங்கள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும்., இதனால் அரசு மூலமாக தாட்கோ மூலம் கடனுதவி செய்தால் மாற்றுத் தொழில் கடனுதவி அளித்தால் எங்கள் வாழ்வாதரத்தை பார்த்துகொள்வோம் எனவும்,  அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர.

 


 

கிளி சோதிடம் நிறுத்தப்பட்டதால் தமிழ்நாடு முழுக்க ஆயிரக்கணக்கான கிளி ஜோதிடர்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம்

 

பின்னர் செய்தியாளர்களை ச ந்தித்த தமிழ்நாடு குறவர்கள் பேரவையின் மாநிலத் தலைவர் செல்வராஜ் கூறுகையில்...,” நாங்கள் ஜோதிடத்திற்கு பயன்படுத்தி வந்த கிளிகளை வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் படி வனத்துறையினர் பறிமுதல் செய்ததால் 2 ஆண்டுகளாக வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளோம், பரம்பரை பரம்பரையாக செய்யப்பட்ட கிளி சோதிடம் நிறுத்தப்பட்டதால் தமிழ்நாடு முழுக்க ஆயிரக்கணக்கான கிளி ஜோதிடர்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். தாட்கோ மூலம் தமிழக அரசு எங்களுக்கு கடனுதவி செய்தால் ஜவுளிக்கடை, பொட்டிக்கடை என எதாவது ஒரு தொழில் செய்து பிழைத்துக் கொள்வோம்" என கூறினார். மேலும் வனத்துறையினர் கிளியை பறிமுதல் செய்யும்போது தங்களை அடிப்பதாகவும் தெரிவித்தனர்