ஆஸ்கருக்கு பரிசீலிக்கப்பட்ட படங்கள்


நடப்பாண்டிற்கான ஆஸ்கர் விருதிற்கான போட்டிக்கு இந்தியா சார்பில் மொத்தம் 28 படங்கள் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.  இதில் மொத்தம் 6 தமிழ் படங்கள் ஆகும். அந்த வகையில்  மகாராஜா, கொட்டுக்காளி, ஜமா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வாழை, தங்கலான் ஆகிய படங்கள் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு அனுப்பப்பட்டன. தெலுங்கில் இருந்து 3 படங்களும், மலையாளத்தில் இருந்து 4 படங்களும், ஒடியா மொழியில் இருந்து 1 படமும், இந்தியில் இருந்து 12 படங்களும், மராத்தியில் இருந்து 3 படங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் யாவும் அடுத்தாண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஆமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் வெளியான லாபதா லேடீஸ். திரையரங்கத்திலும் ஓடிடி தளத்திலும் பரவலான கவனத்தைப் பெற்ற இந்த  திரைப்படம்  இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்கிற பிரிவின் கீழ் இப்படம் ஆஸ்கருக்கு போட்டியிட இருக்கிறது. தமிழ் மற்றும் மலையாள மொழியில் நல்ல படங்கள் இருந்தும் எந்த படமும் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்படாதது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் இது குறித்து தனது கருத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்


இந்த படங்களை ஆஸ்கருக்கு அனுப்பியிருக்கலாம்



"Laapataa ladies இந்தி திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு feel good drama திரைப்படம்.



ஆனால் அதை விட கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடு ஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்." என வசந்தபாலன் தனது பதிவில் கூறியுள்ளார்.