மோகன் ஜி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டுவில் மாட்டுக்கொழுப்பு , பன்றிக் கொழுப்பு , மீன் எண்ணெய் உள்ளிட்டவை லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் கலக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவுகள் உறுதிசெய்துள்ளன. இந்த தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி என்பது வெறும் ஆந்திராவுக்கு மட்டுமானது இல்லை. உலகம் முழுக்க இருக்கும் இந்துக்களுக்கு சொந்தமானது. கிட்டதட்ட 370 வருடங்களாக இந்த லட்டு பாரம்படியம் இருந்து வருகிறது. அதனால் இதை கேள்வி கேட்பது எல்லா இந்துக்களுக்கும் இருக்கு. இதுக்கு முழுமுழுக்க பொறுப்பேற்க வேண்டியது திருப்பதி தேவஸ்தானம் தான். இதே இடத்தில் யாராவது விஷம் கலந்திருந்தார்கள் என்றால் என்ன செய்திருக்க முடியும். திருப்பதி தேவஸ்தானத்தை கலைக்க வேண்டும் . இதே விஷயம் வேறு ஒரு மதத்தில் நடந்திருந்தால் இது ஒரு பெரிய பிரச்சனை ஆகியிருக்கும் .
இதுபற்றி வெளிப்படையாக யாராவது எதிர்ப்பை தெரிவித்தார்களா. ஆனால் சால்வையை போர்த்திக்கொண்டு கோயிலுக்கு சென்றவர்கள் ஏராளம் . திருப்பதி என்ன ஏழை கோயிலா? தரமான நெய்யை வாங்கி லட்டு தயாரிக்கலாமே.
பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை
இதேபோன்ற ஒரு பிரச்சனை தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பெரிய கோயிலில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் மாத்திரைகள் கலக்கப்படுவதாக எனக்கு செவி வழியாக செய்திகள் வந்தன. ஆனால் அந்த பிரச்சனையை வேறு ஏதோ ஒரு பிரச்சனையா திரை திருப்பி விட்டார்கள். திட்டமிட்டே பழநி கோயிலில் வேலை செய்பவர்கள் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்த பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்குவதாக எனக்கு தகவல்கள் வந்தன. இந்த மாதிரியான விஷயங்கள் நிறைய இடங்களில் நடக்கிறது. என்னிடம் போதுமான ஆதாரம் இருந்திருந்தால் நானே பத்திரிகையாளர்களை சந்தித்திருப்பேன். இந்த மாதிரியான விஷயங்களில் இன்னும் அதிக கவனம் தேவை என்பதுதான் என்னுடைய கோரிக்கை. இதே இடத்தில் யாராவது விஷம் கலந்திருந்தார்கள் அந்த நிலைமையை யோசித்து பாருங்கள். இந்த மாதிரி நடக்கிறது இதனை அரசு போதுமான கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் . " என்று மோகன் ஜி பேசியிருந்தார்
மோகன் ஜி கைது
மோகன் ஜி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செப்டம்பர் 24 ஆம் தேதி அவரை தமிழ்நாடு காவல் துறை கைது செய்துள்ளது. காசிமேடில் உள்ள அவரது வீட்டில் வைத்து மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.