விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி. இந்த தொடர் பரபரப்பான மற்றும் விறுவிறுப்பான  காட்சிகள் மூலம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் பாக்கியலட்சுமியின் கணவர் கோபியின் கள்ளக்காதல் விவகாரம் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.


தந்தையிடம் ராதிகாவுடன் மாட்டிக்கொண்ட கோபி, செல்வி அக்காவின் சந்தேக பார்வையில் சிக்கிக் கொண்டது மட்டுமின்றி தற்போது மகன் எழிலின் சந்தேகத்தில் சிக்கியதுடன் அவரின் சந்தேகத்தையும் உறுதி செய்யும் விதமாகவும் நடந்து கொண்டதால் எழில் நேரடியாக தனது தந்தையிடமே இதுதொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.




கோபி எதுவும் தெரியாதது போல நடித்தாலும் தனது தாய் பாவம் என்றும், அவருக்கு எதுவும் நடந்தால் கொலை செய்துவிடுவேன் என்றும் எழில் மிரட்டுகிறார். தாயின் நிம்மதிக்காக தந்தை கோபியையே கொன்று விடுவேன் என்று எழில் மிரட்டுவது ரசிகர்களுக்கே எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது.

மேலும் படிக்க : Surya 41 : 18 ஆண்டுகளுக்கு பின் பாலாவுடன் மீண்டும் ஒரு பயணம்... ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த சூர்யா!


இது ஒருபுறமிக்க கோபியை பற்றி கோபியின் முன்னாலே ராதிகாவிடம் ராஜேஷ் கோபியை பற்றி அவதூறாக பேசுகிறார். இத்தனை நாட்களாக கோபியின் மீது மிகுந்த நம்பிக்கையில் உள்ள ராதிகாவும் ஒரு நிமிடம் உறைந்து போகிறார். ஆனால், வழக்கம்போல கோபி தனது மாயாஜால வார்த்தைகளால் ராதிகாவையும் நம்ப வைக்கிறார். ராஜேஷிற்கே தெரியாத வகையில் வேறு வீட்டிற்கு செல்லுமாறு கூறும் ராதிகாவுடன் புதிய வீட்டிற்கு செல்லவும் திட்டமிடுகிறார்.





ராதிகாவிற்கு தெரியாமலும், பாக்கியலட்சுமிக்கு தெரியாமலும் இரண்டு குடும்பங்களை நடத்தி வரும் கோபியின் லீலைகள் ஒவ்வொன்றாக அவிழ்ந்து வரும் நிலையில், கோபி எப்போது மாட்டிக்கொண்டு நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்வார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். கோபியை எழிலும் மிரட்டியுள்ளதால் இந்த வார எபிசோட்கள் அனைத்தும் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க : Oscar Award Winners : சிறந்த நடிகர் - வில் ஸ்மித், சிறந்த படம் - கோடா..! யார்? யாருக்கு? என்னென்ன ஆஸ்கர் விருதுகள்..! முழு விவரம்..!

மேலும் படிக்க : Vijay Devarakonda Next: பூரி ஜெகன்நாத்துடன் மீண்டும் இணையும் விஜய்தேவரகொண்டா.. தேசப்பற்று கதை.. ஜான்வி ஹூரோயின்.. அசரவைக்கும் அப்டேட்..!



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண