மகாராஜா
விஜய் சேதுபதி நடித்து கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் மகாராஜாவை நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கியிருக்கிறார். அனுராக் கஷ்யப், பாரதிராஜா , மம்தா மோகந்தாஸ் , அபிராமி , நட்டி , சிங்கம் புலி , பாய்ஸ் மணிகண்டன் , முனிஷ்காந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அஜ்னீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மகாராஜா படத்தின் கதை
வீடுகல் புகுந்து கொள்ளையடித்து வரும் செல்வம் ( அனுராக் கஷ்யப்) தன்னை மகாராஜா ( விஜய் சேதுபதி) காவலர்களிடம் மாட்டிவிடுவதாக தவறாக புரிந்துகொள்கிறார். இதனால் தனது பாசத்துற்குரிய மகளையும் மனைவியையும் இழக்கும் செல்வம் மகாராஜாவை பழிவாங்க நினைக்கிறார். விபத்தில் தனது மனைவியை இழந்த மகாராஜா தனது ஒரே மகள் , சலூன் கடை என்ன வாழ்ந்து வருகிறார். தனது வீட்டில் இருந்த குப்பைத் தொட்டியை காணவில்லை என மகாராஜா போலிஸில் புகாரளிப்பதில் தொடங்கும் படம் அடுத்தடுத்த கட்டங்களில் எமோஷனலான ஒரு படமாக மாறுகிறது. விறுவிறுப்பான திரைக்கதை , அங்கங்கே ட்விஸ்ட் , அப்பா மகள் செண்டிமெண்ட் என திரைக்கதையை மிகவும் லாவகமாக கையாணிருக்கிறார்.
இதனால் ரசிகர்களுக்கு இப்படம் ஒரே நேரத்தில் உணர்ச்சிவசமான ஒரு படமாகவும் அதே நேரத்தில் விறுவிறுப்பான ஒரு அனுபவமாகவும் படம் அமைந்திருக்கிறது. திரையரங்கில் இரண்டாம் வாரமாக கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் மகாராஜா படத்தின் வசூல் நிலவரத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மகாராஜா பாக்ஸ் ஆஃபிஸ்
மகாராஜா படத்தின் வெற்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு தமிழில் வெளியான படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் பெரியளவில் ஸ்கோர் செய்யவில்லை. சமீபத்தில் வெளியான சூரியின் கருடன் படம் ஓரளவிற்கு இந்த குறையை போக்கியது என்று சொல்லலாம். தற்போது 2024 ஆம் ஆண்டு அதிவேகமாக 50 கோடி வசூல் இலக்கை எட்டிய படமாக மகாராஜா அமைந்துள்ளது.
படக்குழு வெளியிட்ட தகவலின்படி மகாராஜா படம் இதுவரை உலகளவில் 55.8 கோடி வசூலித்துள்ளது. இனி வரக்கூடிய வாரங்களில் படம் 100 கோடி இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் படிக்க : Kamalhaassan : யாருமே செய்யாத ஒன்றை செய்திருக்கிறோம்... கல்கி படத்தில் தனது கேரக்டர் பற்றி கமல்கமல்