கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 42 பேர் இந்த கள்ளச்சாராயத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் இன்று அதிகாலை உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது. 


 


எங்கெங்கு எவ்வளவு உயிரிழப்பு பதிவு..? 



கடந்த 3 நாட்களில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 3 பேர் என ஆரம்பித்த உயிரிழப்பு தற்போது வரை 50 ஐ தொட்டுள்ளது. மேலும், இந்த கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிலைமை மோசமாகி வருவதால், உயிரிழப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. 


இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அதிகபட்சமாக 28 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுபோக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும் என மொத்தமாக 50 பேரை காவு வாங்கியுள்ளது இந்த கள்ளச்சாராயம். இந்தியாவில் இதற்கு முன்பு நடந்தேறிய கொடூர கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் குறித்து பார்ப்போம்.


கர்நாடகா முதல் டெல்லி வரை



1981 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில், கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 345 ஆக உள்ளது. இதுவே இந்தியா வரலாற்றில் பதிவான அதிகபட்ச கள்ளச்சாராய உயிரிழப்பாகும்.


தொடர்ந்து 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி கேரளா வைப்பின் பகுதியில் கலாச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 72.


தலைநகர் டெல்லியில் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 ஆக இருந்தது.


ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் 1992 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற, கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 200 தொட்டது.


அதன் தொடர்ந்து கள்ளச்சாராய மரணங்கள் சில ஆண்டுகள் அதிகமாக நடைபெறாமல் இருந்த நிலையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ள ஆனேகல் என்ற பகுதியில் நடந்த கலாச்சார உயிரிழப்பின் எண்ணிக்கை 180 தொட்டது.


2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு 136 ஆக இருந்தது.


மேற்கு வங்கத்தில் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்ற கலாச்சார உயிரெழுப்பின் எண்ணிக்கை 167 ஆக இருந்தது.


உத்திரபிரதேசத்தில் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற கலாச்சாராய உயிரிழப்பின் எண்ணிக்கை 40 ஆக இருந்தது. 


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 102 ஆக இருந்தது.


2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி அசாம் மாநிலத்தில் கள்ளச்சார உயிரிழப்பு எண்ணிக்கை 156 ஆக இருந்தது.


2020 ஜூலை 29ஆம் தேதி பஞ்சாப் அமிர்தசரஸ் பகுதியில் கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 121 ஆக இருந்தது.


2022 ஜூலை 25ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42 தொட்டது.


பீகார் மாநிலம் சரண் பகுதியில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற்ற கள்ளச்சாராயம் உயிரிழப்பு எண்ணிக்கை 73 ஆக இருந்தது.


2023 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி தமிழ்நாட்டில் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் நடந்த கலாச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 28 ஆக இருந்தது.


இந்தநிலையில் கள்ளக்குறிச்சியில் ஜூன் 19ஆம் தேதி நடைபெற்ற கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 50 நெருங்கி வருகிறது