Vijay Beast Release LIVE: அமெரிக்கா, ஆஸியில் பீஸ்ட் வசூல் இதுதான்..!

Vijay Beast Movie Release LIVE Updates: பேனர்கள், தோரணங்கள் என பல திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. 

ABP NADU Last Updated: 13 Apr 2022 09:54 PM
அமெரிக்க பீஸ்ட் வசூல்..

அமெரிக்காவில் ஒரே நாளில் 5.7 கோடி வசூல் செய்த பீஸ்ட்..

ஆஸ்திரேலியாவில் பீஸ்ட் வசூல்..

ஆஸ்திரேலியாவில் 250K டாலர்களை ஒரே நாளில் வசூலித்த பீஸ்ட்.. 

தியேட்டரில் பெயர் சூட்டுவிழா - 2 வயது குழந்தைக்கு வீரராகவன் என பெயர் வைத்த ரசிகர்

தியேட்டரில் பெயர் சூட்டு விழா - 2 வயது குழந்தைக்கு வீரராகவன் என பெயர் வைத்த ரசிகர்

பீஸ்ட் பார்த்த 100 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோலை இலவசமாக கொடுத்த விஜய் ரசிகர்கள்!

தாம்பரத்தில் விஜய் படம் பார்த்த இருசக்கர வாகன ஓட்டிகள் 100 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி விஜய் ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டம்

வைரலாகி வரும் பீஸ்ட் பட வசனம்

மத்திய அமைச்சர்: பிரதமர் என்ன முடிவு பண்ணி இருக்கார்னா...
விஜய்: அவர் என்ன வேணா முடிவு பண்ணட்டும்... நான் தடவ முடிவு பண்ணா... என் பேச்சை நானே கேட்க மாட்டேன்

Background

தமிழகம் முழுவதும் பீஸ்ட் ஃபீவர் தொற்றிக்கொண்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். படத்துக்கான முன்பதிவு தீவிரமாக இருந்தது. பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு ஆரம்பித்த உடனேயே முடிந்துவிட்டது. எப்போது விடியும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு முதல் ஷோ திரையிடப்பட்டுள்ளது. பேனர்கள், தோரணங்கள், பாலாபிஷேகம், பட்டாசு என பல திரையரங்குகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.