கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Toyota VellFire கார் மற்றும் படத்தை இயக்கிய இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றையும் பரிசாக அளித்தார். இதன் புகைப்படங்கள் டிவிட்டரில் வெளியாகி வைரலானது. 


இந்நிலையில், ஐசரி கணேஷ் கவுதம் வாசுதேவிற்கும், சிம்புவிற்கும் அன்பளிப்பு வழங்குவதன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 






இந்த வீடியோவை ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து வருகின்றனர்.


விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3 வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”.  ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். நடிகை ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், செப்டம்பர் 15ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம்,  கலவையான விமர்சனங்களை முதல் சில நாள்களில் பெற்றாலும், அதன் வசூல் தொடர்ந்து நிதானமான பாதையில் பயணித்து தற்போது வெற்றிப் படமாக அமைந்துள்ளது.


குறிப்பாக படத்தில் சிலம்பரசனின் நடிப்பும், ஏ.ஆர்.ஆரின் இசையும் பெரிதளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முன்னதாக படம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ வசூல் தொடர்பான அறிவிப்பின்படி, படம் வெளியாகி 4 நாள்களில் 50. 55 கோடி ரூபாயை படம் வசூலித்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து சிம்பு, கௌதம் மேனன் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.




மேலும் வாசிக்க..


VTK Success Meet: மஜா ஆகயா.. கெளதம், சிம்புவுடன் சிவகார்த்திகேயன்..VTK சக்சஸ் பார்ட்டியில் ஜமாய்!


Dhanush Helps Bonda Mani: சிகிச்சைக்கு பணம் அனுப்பிய தனுஷ்..எமோஷனல் ஆகி வீடியோ வெளியிட்ட போண்டாமணி!


Bharathiraja:திடீரென மருத்துவமனைக்கு வந்துச் சென்ற பாரதிராஜா.... என்னதான் ஆச்சு இயக்குநர் இமயத்திற்கு.