VTK Success Meet: மஜா ஆகயா.. கெளதம், சிம்புவுடன் சிவகார்த்திகேயன்..VTK சக்சஸ் பார்ட்டியில் ஜமாய்!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் சக்சஸ் பார்ட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார். 

Continues below advertisement


‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் சக்சஸ் பார்ட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டுள்ளார். 

Continues below advertisement

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3 வது முறையாக இணைந்த படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்தார். நடிகை ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  

 

விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், செப்டம்பர் 15ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப்படம், கலவையான விமர்சனங்களை முதல் சில நாள்களில் பெற்றாலும், அதன் வசூல் தொடர்ந்து நிதானமான பாதையில் பயணித்து தற்போது வெற்றிப் படமாக அமைந்தது என திரைவட்டாரத்தில் பேசப்படுகிறது.

குறிப்பாக படத்தில் சிலம்பரசனின் நடிப்பும், ஏ.ஆர்.ஆரின் இசையும் பெரிதளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முன்னதாக படம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ வசூல் தொடர்பான அறிவிப்பின்படி, படம் வெளியாகி 4 நாள்களில் 50.55 கோடி ரூபாயை படம் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Toyota VellFire காரை பரிசாக அளித்துள்ளார். மேலும் படத்தை இயக்கிய இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.

 

இந்த சக்சஸ் பார்ட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola