சிறுநீரக தொற்று காரணமாக மீண்டும் மருத்துவமனைக்கு, இயக்குநர் பாரதிராஜா வந்து சென்றுள்ளார்.


81 வயதான இயக்குநர் பாரதிராஜா கடந்த மாதம் 26 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆல்டர்ட் சென்சோரியம் (நுரையீரல் பாதிப்பு) பாதிப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது உடல்நிலை தேறியதன் காரணமாக செப்டம்பர் 9ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படார்.


மீண்டும் அனுமதி:


இந்நிலையில் சிறுநீரக தொற்று காரணமாக மீண்டும் ஏற்கனவே சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று வந்தார். சிகிச்சை முடிந்த அவர் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மீண்டும் வீடு திரும்பினார். 


உடல் நலக் குறைபாடு:


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி தனது 81 வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார். ஏற்கனவே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வீட்டில் இருந்தே சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.






திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை தெரிவித்ததோடு, தங்கள் வாழ்த்துகளையும் சமூக வலைத்தளங்களில் கூறினர். இதனையடுத்து பாராதிராஜா உடல்நிலை குறித்து மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பாரதிராஜா செப்டம்பர் 9ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து  டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று, இயக்குநர் பாரதிராஜா சிறுநீரக தொற்று காரணமாக மீண்டும் மருத்துவமனைக்கு, வந்து  சிகிச்சை பெற்றார். பின் உடல் நலம் தேறியதையடுத்து இயக்குநர் பாரதிராஜா வீடு திரும்பினார்.


Also Read: Bonda Mani Admitted in Hospital : உதவிய நடிகர்கள்.. நன்றி சொன்ன போண்டாமணி!


Also Read: Comedy Actor Benjamin Crying : ”அநாதையாக போய்விடக்கூடாது” போண்டா மணிக்காக கண்ணீர்விட்ட நடிகர்