திருடா திருடா படம் தோல்வி அடைந்ததில் தான் எழுதிய பாடலுக்கு பெரும்பங்கு இருப்பதாக மணிரத்னம் கூறியதாக வைரமுத்து பேசியுள்ளார். 


இது குறித்து சன் டிவிக்கு மணிரத்னம், வைரமுத்து, ஏ.ஆர் ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில், வைரமுத்து பேசும் போது “ ராசாத்தி பாடலை பதிவு செய்துகொண்டிருந்தபோது, பாரதிராஜா உள்ளே வந்துட்டாரு.. அந்தப் பாட்டை கேட்ட பாரதிராஜா, என்ன கவிஞரே.. எனக்கு எழுதித்தர வேண்டிய பாட்டெல்லாம் நீங்க மணிரத்னத்துக்கு எழுதிக்கொடுத்திட்டு இருக்கீங்க..  என்ன மாதிரி பாட்டு இது என்றார்.. உடனே நான் கதையின் போக்கு அந்த மாதிரி இருக்கு. ஒரு நாட்டுப்புற பாட்டுதான் இருக்கு.. அது உச்சத்துல இருக்குணும்ணு நினைச்சோம்.. அதனால அது அப்படி வந்துச்சு..  என்றேன் 


 


Shilpa Shetty Kissing case: விழா மேடையில் முத்தமிட்ட ஹாலிவுட் நடிகர்.. வெடித்த சர்ச்சை.. வழக்கில் இருந்து ஷில்பாவை விடுவித்த நீதிபதி..!


 



ஆனால் படம் வெளியான பிறகு மணிரத்னம் என்னிடம் வந்து இந்தப்படத்தை தோல்விக்கு அழைத்து போனதுல இந்தப்பாட்டுக்கு பெரும் பங்கு இருக்கு என்றார்....  எனக்கு ஒண்ணுமே புரியல.. உடனே ஏன் சார் அப்படினு கேட்டேன், உடனே அவர், “சார் நான் ஒரு பொழுதுபோக்கு படம் எடுத்துருக்கேன். ஆனால் நீங்க இந்தப் பாட்டுல ஒரு காதல் காவியமே எழுதிருக்கீங்க.. இந்தப் பாட்ட கேட்டுட்டு ரசிகன் மணிரத்னம் ஒரு காதல் காவியத்தை எடுத்திருக்கார்ணு நம்பி தியேட்டருக்கு வந்துருக்கான். ஆனா தியேட்டர்ல அது  வேறமாதிரி இருந்துச்சு.. அதுல ரசிகன் ஏமாந்துட்டான்” என்றார். அன்னைக்கு நான் பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்பார்களே அதே போல.. படமறிந்து பிச்சை போடுணும்ணுங்கிறத தெரிஞ்சிக்கிட்டேன்” என்று  பேசினார். 


Back pain | பைக், காரை விட்டு இறங்கியதும் முதுகு வலி கொல்லுதா? முதுகு தண்டை பாதுகாக்க இதை பண்ணுங்க!


தொடர்ந்து பேசிய மணிரத்னம், “ இந்தப் பாட்டை கேட்ட உடனே இதை இங்கே வைக்க கூடாதுணு தெரிஞ்சுச்சு. ஆனா எனக்கு இந்த பாட்ட விட்டுக்கொடுக்க மனமில்ல.. அதனால்தான் நான் அந்தப் பாட்டை வைச்சேன். சில சமயங்களில் இந்த மாதிரி ஆகிவிடும்.” என்றார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண