பந்தாவா பைக்கில் போவது பெரிதல்ல... வீடு திரும்பியதும் வரும் முதுவலி இருக்கிறதே... பேசாமல் கற்காலத்திற்கு போய்விடலாமா என்று தோன்றும். பெருநகரில் சாதாரணமாக அலுவலகம் செல்ல அரை மணி நேரத்திற்கு மேலான பைக் பயணம் தேவைப்படுகிறது. வீடு திரும்பும் போது, போக்குவரத்து நெரிசலில் அது இன்னும் கூட அதிகரிக்கலாம். ஆக, ஒரு நாளைக்கு 1 மணி நேரம் வரை பைக்கில் பயணிப்பது கட்டாயமாகிவிட்டது. இவ்வாறு பயணிப்பதில் கூட சிரமம் இருப்பதில்லை. அதன் பின் சந்திக்கும் மோசமான அனுபவங்கள் தான், பைக் ஓட்டிகளை பாடாய் படுத்துகிறது. கார், பஸ் ஓட்டுபவர்களுக்கும் இதே பிரச்சனை தான். அதற்கும் தீர்வுகள் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள்.
முதுகுவலிக்கு மூல காரணம்... குண்டும் குழியுமான ரோடுகள். உங்கள் வாகனம் அதை கடைந்து போகும் போது எலும்புகள் உங்களுக்கே தெரியாமல் பாதிக்கப்படும். அது அப்போது எதுவும் செய்யாது. நீங்கள் ஓய்வுக்கு தயாராகும் போது, பாடாய் படுத்தும். குறிப்பாக முதுகு தண்டை அது கடுமையாக பாதிக்கும். கம்யூட்டரில் பணியாற்றுபவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கும்.
ஸ்கூட்டர் போன்ற எடை குறைவான வாகனத்தை பயன்படுத்தினால், உங்கள் முதுகுத்தண்டு இன்னும் பாதுகாப்பாக இருக்கும். புல்லட் போன்ற எடை அதிகமான வாகனத்தை பயன்படுத்தும் போது எதார்த்தமாகவே எடையை சமாளிக்க முடியாமல், முதுகு தண்டு பாதிக்கும். ‛லம்பர் சப்போர்ட்’ எனப்படும் பெல்ட் அணிந்து எடை அதிகமான பைக்குகளை இயக்கலாம்.
ரொம்ப டைட் பேண்ட் மற்றும் பெல்ட் அணிந்து பைக்கு ஓட்டுவது உங்கள் வலி அதிகரிக்க காரணம் ஆகலாம். அது உங்களை நிலையில்லாமல் அமரச் செய்யும். அதனால் உடல் சீராக இயங்காமல் தண்டுவடம் பாதிக்கும். காரில் செல்பவர்களுக்கு அது போல் ஒரு அபாயம் உள்ளது. புதியவகை கார்களில் ‛லம்பர் சப்போர்ட்’- சீட் அமைக்கப்பட்டிருக்கலாம், கொஞ்சம் பழைய மாடல் கார்கள் என்றால் அந்த வகை இருக்காது. அது ஓட்டுனர்களை படுத்தி எடுத்துவிடும். அலுவலகத்தில் அமர்ந்த பணியாற்றுபவர்களுக்கும் இந்த தொல்லை இருக்கும்.
அவர்கள் முதுகில் ஒரு சின்ன தலையணை அல்லது துண்டை முக்கோண வடிவில் மடித்து வைத்துக் கொள்ளலாம். அது நிச்சயம் ஆறுதலாக இருக்கும். காரோ, பைக்கோ நீண்ட நேரம் ஓட்டுவது தவறான செயல். கொஞ்சம் இடைவெளி எடுத்து, ரிலாக்ஸ் ஆனால், நீண்ட நேர பயணத்தில் சிரமம் இருக்காது. குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ரிலாக்ஸ் தேவை. இதனால் முடங்கிப் போயிருக்கும் கை, கால், முதுகு எலும்புகள் ரிலாக்ஸ் ஆகும்.
இது மிக முக்கியமானது... தினமும் ஒரு அரை மணி நேரம் நடந்து பயிற்சி சென்றால், பைக், கார் மற்றும் இதர வாகனங்கள் ஓட்டுவோருக்கு பெரிய பலன் கிடைக்கும். நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்