Uriyadi Vijay: இயக்குநருக்காக மேடையில் கண்கலங்கிய ‘உறியடி’ விஜய்குமார்.. நம்பிக்கை தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!

“இது ஆங்கிலப் படத்தின் டைட்டில். அது வேறு, இது வேறு. இந்தப் படத்துக்கு அதன் தலைப்பு பொருத்தமாக இருக்கும். கெடுத்துவிட மாட்டோம் என்று முடிவு செய்து ஃபைட் கிளப் எனப் பெயரிட்டோம்” - உறியடி விஜய்குமார்

Continues below advertisement

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் 'உறியடி' விஜய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள FIGHT CLUB திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் FIGHT CLUB படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை, ஈக்காட்டுதாங்கலில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் லோகேஷ் கனகராஜ், 'உறியடி' விஜய் குமார், நடிகை மோனிஷா மேனன், இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத், தயாரிப்பாளர் ஆதித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

அப்போது 'உறியடி' விஜய் குமார் மேடையில் பேசுகையில், "இந்தப் படத்துக்கு intenseஆன டைட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து இது முடிவானது. இது ஆங்கிலப் படத்தின் டைட்டில். அது வேறு... இது வேறு... இந்தப் படத்துக்கு அதன் தலைப்பு பொருத்தமாக இருக்கும். கெடுத்துவிட மாட்டோம் என்று முடிவு செய்து ஃபைட் கிளப் எனப் பெயரிட்டோம். இந்தப் படம் 2020இல் ஆரம்பிக்கப்பட்டது.

ஒரு படத்துக்கான நேரத்தை கொடுத்துவிட வேண்டும். படம் நல்லபடியாக முடிந்தது. லோகேஷிடம் இந்தப் படத்தைக் காட்டினோம். 2017இல் இருந்து படம் பண்ண வேண்டும் என்று நினைத்தது ஃபைட் கிளப்பில் நடந்தது சந்தோசம். 

ஒரு கல்லூரி கதை செய்யலாம் என்று லோகேஷ் கூறினார். அந்தக் கதையில் தெளிவாக இருந்தது‌. ஆனால் அது பண்ண முடியவில்லை. ( தொடர்ந்து இயக்குநர் அப்பாஸ் பற்றி பேசும் போது கண் கலங்கினார் உறியடி விஜய் குமார்)

அப்பாஸ் சினிமா பைத்தியம். அவர் என்னுடைய உதவியாளர் தான். ஆனால் மானசீக குரு மணிரத்னம் தான். அப்பாஸின் வெற்றிக்காக காத்திருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மேடையில் பேசுகையில், “இது எனக்கு மாநகரம் மேடை மாதிரி தான். முதல் தொடக்கம். உறியடி விஜய் பெயரும், என் பெயரும் ஒரே படத்தில் வர வேண்டும் என்று 2017இல் இருந்து பேச ஆரம்பித்தது. நான் என் வாழ்க்கையில் பார்த்த genuineஆன நபர் அவர்தான். 

நான் இந்தப் படத்தை வழங்குவதை என் நிறுவனத்துக்கான பாதையாக பார்க்கிறேன். இந்தப் படத்தை சரியாக மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். ஒரு நிறுவனம் உருவாக்கியது வழக்கமான ஒன்றில்லை. என்னுடைய ஆரம்பக் காலத்தில் எனக்காக உதவியவர்கள் போல நான் 4 பேருக்கு உதவ வேண்டும் என்பதற்காக தான் இந்த நிறுவனம்” எனப் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: Annapoorani Review: சாதிக்கும் துடிப்புடன் கரண்டி பிடித்த நயன்.. அறுசுவை விருந்து படைத்தாரா.. அன்னபூரணி விமர்சனம்!

Parking Review : ஈகோ மோதலில் அடித்துக்கொள்ளும் ஹரிஷ் கல்யாண்-எம்.எஸ் பாஸ்கர்.. பார்க்கிங் பட விமர்சனம் இதோ!

Continues below advertisement
Sponsored Links by Taboola