சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் குணசேகரனை போலீஸ் கைது செய்து அழைத்துச் செல்கிறது. வெளியில் சென்ற குணசேகரன், ஜனனியும் சக்தியையும் பார்த்து "நான் வீட்டுக்குள் வருவதற்குள் நீங்க இரண்டு பேரும் ஓடிப் போயிடனும்" என மிரட்டி விட்டு செல்கிறார்.
போலீஸ் வந்ததும் போய் எங்கேயோ பதுங்கி கொண்ட ஜான்சி ராணி, போலீஸ் குணசேகரனை அழைத்து செல்வது வரையில் அமைதியாக இருந்துவிட்டு பின்னர் வந்து டிராமா போடுகிறாள்.
போலீஸ் ஸ்டேஷன் சென்ற குணசேகரன் அங்கு சாருபாலா இருப்பதை பார்த்து அவரை வம்புக்கு இழுக்க "இது பொது இடம். இங்க யார் வேணும்னாலும் வரலாம், போகலாம்" என சொல்லி சரியான பதிலடி கொடுக்கிறார். மீண்டும் ஜான்சி ராணி அதிரையை வைத்து பிரச்னை செய்ய, கொந்தளித்த ஆதிரை தாலியை அறுத்து எறிகிறாள். ஆதிரையை ஜான்சி ராணி அடிப்பதைப் பார்த்து கொண்டு பொறுக்கமுடியாத ஈஸ்வரி ஜான்சி ராணியை அறைந்து வீட்டை விட்டு வெளியில் விரட்டி அடிக்கிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. குணசேகரனையும் அவரின் தம்பிகள் மற்றும் கரிகாலனை போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். "திருவிழாவுக்கு யாரெல்லாம் கார்ல போனீங்க?" என போலீஸ் அதிகாரி கேட்க "நான்,கதிர் மாமா அப்புறம் கிள்ளிவளவன் மூணு பேரும் ஒண்ணா கார்ல வந்தோம்" என லூசேதனமாக உளறிவிடுகிறான் கரிகாலன். அதைக் கேட்டு குணசேகரனும் கதிரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
சக்தி மீதும் ஜனனி மீதும் இருந்த கோபம் போன மாதிரி, அவர்களை வீட்டுக்குள் மீண்டும் குணசேகரன் வர சொல்வதற்கு பின்னால் ஏதாவது பெரிய பிளான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.