Dhoni In The Goat Movie: தி கோட் படத்தில் தோனி இருக்கிறார்; ஆனால் நடிக்கவில்லை... வெங்கட் பிரபு ட்விஸ்ட்

விஜயின் தி கோட் படத்தில் தோனி இருக்கிறாரா இல்லையா என்கிற கேள்விக்கு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு பதில் அளித்துள்ளார்

Continues below advertisement

தி கோட் படத்தில் தோனி ?

விஜயின் தி கோட் வரும் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பொதுவாக வெங்கட் பிரபு படங்கள் என்றால் நிறைய எதிர்பார்க்காத திருப்பங்களை எதிர்பார்க்கலாம். அந்த வகையில் ரசிகர்கள் எதிர்பார்க்காத நிறைய திருப்பங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் மறைந்த நடிகர் விஜய்காந்தை ஏஐ மூலமாக உருவாக்கி இருப்பதாக படம் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகை த்ரிஷா ஒரு பாடலுக்கு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இது பற்றி படக்குழு எந்த வித விள்ளகமும் கொடுக்கவில்லை. அதேபோல் முன்னால் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பதாக பல தகவல்கள் வெளியாகின. தி கோட் படத்தின் டிரைலரிலும் சென்னை மற்றும் மும்பைக்கு இடையிலா கிரிக்கேட் போட்டிக் காட்சிகள் இடம்பெற்றிருதது இந்த தகவல்களை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.  இதுகுறித்து தற்போது படத்தின் இயக்குநர் திட்டவட்டமாக பேசியுள்ளார். 

Continues below advertisement

தோனி இருக்கிறாரா ? இல்லையா?

இது குறித்து பதிலளித்த வெங்கட் பிரபு இப்படி கூறியுள்ளார் ' தி கோட் படத்தில் தோனியை நடிக்க வைக்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஐடியா இருந்தது. ஆனால் அதற்குள்ளாக அந்த தகவல் எப்படியோ வெளியே கசிந்துவிட்டது. நாங்கள் நினைப்பது எல்லாம் உடனே செய்தியாக வந்திரும். அதனால் அந்த ஐடியாவை நாங்கள் கைவிட்டோம். படத்தில் சென்னை மற்றும் மும்பை இடையில் கிரிக்கேட் போட்டிக் காட்சிகள் இருக்கின்றன. ஒரு சர்வதேச போட்டியாக இல்லாமல் ஐ.பி.எல் போட்டியாக இருந்தால் அது மக்களுக்கு கனெட்க் ஆகிகொள்ள முடியும் என்று தான் வைத்தேன். அந்த வகையில் ஒரு போட்டியில் மற்ற வீரர்கள் இருப்பது மாதிரியான காட்சிகளையும் நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால் தோனி இந்த படத்திற்கு என்று தனியாக வந்து நடிக்கவில்லை. ' 

தோனி இப்படத்தில் நடிக்கவில்லை என்றாலும் ஐ.பி.எல் போட்டிகளில் தோனி சிக்ஸ் அடித்த ஷாட்கள் கண்டிப்பாக படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola