குபேரா ஓடிடி ரிலீஸ்

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் , நாகர்ஜூனா , ராஷ்மிகா நடித்த குபேரா திரைப்படம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியானது. தமிழ் ரசிகர்களை காட்டிலும் தெலுங்கு ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. உலகளவில் குபேரா திரைப்படம் ரூ 132 கோடி வசூலித்துள்ளது. தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் , வாத்தி , ராயன் , குபேரா தொடர்ச்சியாக 100 கோடி வசூல் சேர்த்துள்ளன.

குபேரா படத்தில் ஒரு பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பு ரசிகர்களின் பாராட்டுக்களை வாங்கி குவித்து வருகிறது.  இப்படியான நிலையில் குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 18 ஆம் தேதி அமேசான் பிரைமில் குபேரா திரைப்படம் வெளியாக இருக்கிறது. 

தனுஷ் அடுத்தபடியாக போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசர் கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். தனுஷூக்கு ஜோடியாக மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார். மேலும் K.S. ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். D54 படத்தின் பூஜை நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது