பாலிவுட் சினிமாவில் 80களில் கதாநாயகனாக வலம் வந்தவர் சஞ்சய் தத். பாலிவுட் திரையுலகில் ஜகான் என்றும் குழந்தைகள் அவரை அழைப்பார்கள். 40 ஆண்டுகளாக கோலோச்சி வரும் இவர் 135 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் இந்தியை தாண்டி தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார். கன்னட திரையுலகில் வில்லனாக நடித்து வரும் இவர், இயக்குநர் லோகோஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன் என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்தி பாஷா சஞ்சய் தத்

இந்தியில் வெளியான முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் சஞ்சய் தத். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அக்னிபத் படத்தின் மூலம் மிகப்பெரிய வில்லனாக நடித்த சஞ்சய் தத் ரசிகர்களை வியக்க வைத்தார். கடந்த 1993-ம் ஆண்டு கல்நாயக் என்ற இந்தி திரைப்படம் வெளியான போது, இந்தியாவெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்படத்தில் அவர் தீவிரவாதியாக நடித்திருந்தார். இந்தி திரையுலகில் சஞ்சய் தத் நடிக்காத கதையே கிடையாது.

காமெடி படங்கள்

சிறை வாழ்க்கைக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கிய அவர் காமெடி படங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அக்சய் குமார், அஜய் தேவ்கன் போன்ற நடிகர்களோடு போட்டி போட்டு காமெடி படங்களில் நடித்து வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். மனதில் பட்டதை ஓபனாக பேசும் சஞ்சய் தத் நான் இன்னும் சிறப்பாக நடிக்க விரும்புகிறேன். அதற்கான கதையைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கும் எதிர்ப்பும் ஒரு ஆதரவான கருத்துக்களும் வந்தன. கேங்ஸ்டரில் இருந்து காமெடி ரோல் வரை சஞ்சய்தத் கை வைக்காத ரோல்களும் கிடையாது.

கேஜிஎப் பட வில்லன்

நடிப்புக்கு ஓய்வு அளித்த சஞ்சய் தத் மீண்டும் கேஜிஎப் படத்தின் 2ஆம் பாகத்தில் தனது அசூரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படத்தில் அவரது கதாப்பாத்திரமும், கண்களாலேயே மிரட்டும் வில்லத்தனமும் ரசிக்க வைத்தன. யஷ்க்கு எதிரான வில்லத்தனமும் திரையில் பார்க்க பிரம்மிப்பை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான லியோ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இதில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படங்களை தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வரும் சஞ்சய் தத், கன்னட நடிகர் துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுல்ள கேடி படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். 

லோகேஷ் கனகராஜ் மீது கோபம்

கேடி படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இதில், சஞ்சய் தத் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியான டீசரில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் அதிகம் இருக்கிறது. துருவா சர்ஜாவை கொலை செய்ய காத்திருப்பது போன்ற காட்சிகளும் இடம்பிடித்திருக்கின்றன. நடிகரை பலிவாங்க துடிக்கும் வில்லனாக சஞ்சய் தத் இருக்கிறார். இந்நிலையில், கேடி படத்தின் விழாவில் பேசிய சஞ்சய் தத், லியோ படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன். இப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மீது கோபம். லியோ படத்தில் என் திறமையை வெளிப்படுத்தும் விதமான காட்சிகள் இல்லை. மிகவும் குறைவு தான் என தெரிவித்துள்ளார். அவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.