MGR: நான் அதிகமாக டேக் எடுக்கிறேன் என கவலைப்பட்ட போது எம்ஜிஆர் சொன்ன ஒரு வார்த்தை தான் என்னை கவலையில் இருந்து வெளியே வர வைத்தது என்று நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இவர் நடித்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொத்தவை. இந்த நிலையில் எம்ஜிஆர் குறித்து சிரஞ்சீவி பேசிய தகவல் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. சிரஞ்சீவி, அமீர்கான், நாகார்ஜூன் உள்ளிட்டோர் ஒன்றாக அமர்ந்து திரைப்படங்கள் குறித்து விவாதிக்கின்றனர். அப்போது எம்ஜிஆர் குறித்த ஒரு தகவலை சிரஞ்சீவி பகிர்ந்து கொண்டனர்.
சிரஞ்சீவி பேசும்போது, ”ஒரு படத்தில் நடிக்கும்போது டேக் அதிகமாக போகும் தயாரிப்பாளர்கள் என்னையா பிலிம்ம இப்படி முழுங்கறயேன்னு புலம்புவார்கள். அதனால் எனக்கு மனசு கஷ்டமாகிடும். அப்போது எம்ஜிஆர் என்னிடம் ஒன்று கூறினார். செட்ல எத்தனை டேக் எடுக்கறோம் என்பது முக்கியமில்லை. கடைசியா திரையில் ஒரே ஒரு டேக் தான் தெரியும். அது முதல் டேக்கா இல்லை 40 டேக்கா என்பது பார்ப்பவர்களுக்கு தெரியாது. நீங்கள் உங்கள் பெஸ்டை கொடுங்கள் என்றார். அதனால், எனது குற்ற உணர்ச்சி போனது” என்றார். எம்.ஜி.ஆர். குறித்து சிரஞ்சீவி பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
1964ம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த பணக்கார குடும்பம் படம் திரைக்கு வந்தது. காதல், குடும்பம், சென்டிமெண்ட், பழிவாங்குதல் என அனைத்தையும் கொண்ட இந்த படம் திரைக்கு வந்து 150 நாட்களை கடந்து திரையில் ஓடியது. இந்த படம் வெற்றிப்பெற்றதை தொடர்ந்து பணக்கார குடும்பம் 1970ம் ஆண்டு இந்தியில் ஹம்ஜோய் என்ற பெயரிலும், 1978ம் ஆண்டு கன்னடத்தில் பலே ஹுடுகா என்ற பெயரிலும் ரீ மேக் செய்யப்பட்டது.
1984ம் ஆண்டு தெலுங்கில் சிரஞ்சீவி, ரளினி நடிப்பில் பணக்கார குடும்பம் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை கே. பாப்பையா இயக்கி இருந்தார். இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பணக்கார குடும்பம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க: Demonte Colony 2 Trailer: அருள்நிதியிடமிருந்து தொடரும் கதை.. திகிலூட்டியதா டிமான்டி காலனி 2 ட்ரெய்லர்?