நாள் - 17.12.2023 - ஞாயிற்று கிழமை


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00  மணி வரை


குளிகை:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கைகூடும். வியாபாரத்தில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.


ரிஷபம்


துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உழைப்பு நிறைந்த நாள்.


மிதுனம்


புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். வீண் செலவுகளால் மனம் சஞ்சலமாகும். வேலையாட்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த வரவுகள் தாமதமாக கிடைக்கும். அன்பு வேண்டிய நாள்.


கடகம்


நண்பர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் விலகும். துணைவருடன் ஒற்றுமை மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.


சிம்மம்


தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் ஏற்படும். பயணங்களால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். சுகம் நிறைந்த நாள்.


கன்னி


முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலை பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.


துலாம்


மனதில் இனம்புரியாத குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்புகள் குறையும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை சார்ந்த பயணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் அமையும். பணியாளர்களின் மூலம் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். முக்கிய முடிவுகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். முயற்சி மேம்படும் நாள்.


விருச்சிகம்:


குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்களை தவிர்ப்பது நல்லது.  மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆதாயம் அடைவீர்கள். கருத்துகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மத்தியமான லாபம் கிடைக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.


தனுசு


தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணி சார்ந்த பயணம் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் உண்டாகும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உணவு சார்ந்த செயல்களில் கட்டுப்பாடு வேண்டும். பணியாளர்களால் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். ஊக்கம் நிறைந்த நாள்.


மகரம்


சகோதரர்களின் வழியில் ஆதரவு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. பங்குதாரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கல்விப் பணிகளில் புதிய தேடல் உண்டாகும். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.


கும்பம்


குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உறவுகளின் வழியில் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். கவலைகள் விலகும் நாள்.


மீனம்


மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நினைத்த காரியம் கைகூடிவரும். சேமிப்பு சார்ந்த சிந்தனை மேம்படும். சமூகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மனதிருப்தியை ஏற்படுத்தும். பாராட்டு நிறைந்த நாள்.