ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘தமிழா தமிழா’ நிகழ்ச்சியில் வரும் வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடில் இயக்குநர் மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. 


ஜீ தமிழில் ஒளிபரப்பான ”தமிழா தமிழா” நிகழ்ச்சி கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை முதலில் இயக்குநர் கரு.பழனியப்பன் தொகுத்து வழங்கினார். தமிழ் விவாத நிகழ்ச்சிகளில் அதிக பார்வையாளர்களை கொண்ட் நிகழ்ச்சியாக திகழ்ந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து பல காரணங்களால் இயக்குநர் கரு.பழனியப்பன் விலகினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 


இதனிடையே தொடர்ந்து 2 மாதங்களாக தமிழா தமிழா நிகழ்ச்சி ஒளிபரப்பாகாமல் இருந்து வந்தது. அதேசமயம் கரு.பழனியப்பன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வா தமிழா வா’ நிகழ்ச்சி மூலம் ரீ-எண்ட்ரி கொடுத்தார். ஆனால் ரசிகர்கள் ”தமிழா தமிழா” நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் பிரபல ஊடகவியலாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்க மீண்டும் தமிழா தமிழா நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 






இந்த நிலையில் இந்த வாரம், “ஜோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் vs சந்தேகம் எழுப்பும் பொதுமக்கள்” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஜோதிடர்கள் ஒருபுறம், பொதுமக்கள் மறுபுறம் என களைகட்டும் இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ஜி.மாரிமுத்து அழைக்கப்பட்டிருந்தார். இதன் ப்ரோமோ வெளியாகி வைரலாகியுள்ளது.


அதில் ஜோதிடம் சொல்லும் பகுதியில் ஒருவர், ‘சந்திராஷ்டமம் அன்னைக்கு செல்ஃபி எடுத்து டெலிட் பண்ணிடனும்’ என சொல்கிறார். அதற்கு அதே பகுதியில் ஒருவர், ‘உங்கள் முகத்தை எடுத்து நீங்களே அழித்துக் கொள்ளும்போது உங்களுக்கான பிரச்சினைகள் விலகுது’ என விளக்கம் கொடுக்கிறார். இதற்கு கவுண்டர் டயலாக் மாரிமுத்து, ‘கோபம் வர்ற அதே நேரத்தில் சிரிப்பும் வருது. அடக்கிட்டு உட்கார்ந்து இருக்கேன்’ என தெரிவிக்கிறார். 


இதன்பின்னர், ‘நாங்க சொல்லுறது நடக்கலைன்னா ரூ.2 கோடி சொத்தை எழுதி தர்றேன்’ என ஜோதிடர் ஒருவர் சொல்ல, அதற்கு, ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் சிஎம் ஆக மாட்டார். அவருக்கு வந்த பாக்கியம் இல்லை என இந்தியாவில் உள்ள அத்தனை ஜோசியக்காரர்களும் சொன்னார்கள். இப்ப முதலமைச்சர் ஆகிட்டார். மூஞ்சியை கொண்டு போய் எங்கே வச்சிப்பீங்க?’ என கேட்கிறார். 


உடனே அந்த ஜோதிடர், ‘என்ன லாஜிக் பேசுறீங்க?..நாங்க யாருன்னு தெரியுமா?’ என கேட்கிறார். உடனே இயக்குநர் மாரிமுத்து, ‘எந்த ஜோசியராவது சென்னை வெள்ளத்தில் மூழ்கும் என சொன்னானா, கொரோனா வந்தது என சொன்னானா,வந்ததுக்கு அப்புறம் 1008 சொல்லுவாங்க’ என கொதித்தெழும் காட்சிகள் அந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. 


மேலும் படிக்க: CM Stalin EXCLUSIVE Interview: ஏபிபி நாடுவுடன் முதல்வர் ஸ்டாலின்! பூரண மதுவிலக்கு முதல் வாரிசின் வளர்ச்சிவரை.. சுளீர் கேள்விகளும் பளீர் பதில்களும்! மெகா எக்ஸ்குளூசிவ்


Aneethi Review: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்... வசந்தபாலனின் அநீதி படம் சூப்பரா? ..சுமாரா? - முழு விமர்சனம் இதோ..!


Kolai Review: வித்தியாசமான மேக்கிங்... துப்பறியும் நிபுணராக விஜய் ஆண்டனி ஈர்த்தாரா... ‘கொலை’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!