விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரின் இன்றைய எபிசோடில் இனியவாவுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்துள்ளது பள்ளி நிர்வாகம். அனைவரும் அங்கே மிகவும் சந்தோஷமாக இருந்தாலும் பாக்கியாவை தான் தேடுகிறார்கள்.
இனியாவை கோபி அழைத்து "உன்னை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த சாதனை உன்னுடைய முயற்சியால் தான் சாத்தியமானது. உனக்கு என்ன வேண்டும் கேள். நீ என்ன கேட்டாலும் டாடி உனக்கு வாங்கி தருகிறேன்" என்கிறார் கோபி. பள்ளி ஆசிரியை மேடைக்கு இனியாவை அழைக்கிறார்கள். மாலை அணிவித்து மரியாதை செய்ததை பார்த்து அனைவரும் சந்தோஷம் அடைகிறார்கள். அந்த நேரத்தில் கூட பாக்கியா இல்லாததை தான் நினைத்து பார்க்கிறாள் இனியா.
பள்ளி ஆசிரியை இனியாவின் பெற்றோர்களை மேடைக்கு அழைக்கிறார்கள். கோபி "நான் மாட்டும் மேடைக்கு சென்றால் நன்றாக இருக்காது நீயும் வா. இன்று அவள் இந்த சாதனை செய்ததற்கு நீயும் ஒரு முக்கியமான காரணம்" என்கிறார். ராதிகா வேண்டாம் என சொல்லியும் கேட்காமல் அவளையும் மேடைக்கு அழைத்து செல்வதை பார்த்த குடும்பத்தினருக்கு ஆத்திரம் வருகிறது. இனியா மேடையில் தனது உணர்ச்சிகள் எதையும் வெளிகாட்டமுடியாமல் தவிக்கிறாள்.
இனியாவை பற்றி ஆசிரியை மிகவும் பெருமையாக பேச கோபிக்கு ஆனந்த கண்ணீர் வருகிறது. இனியா தோள் மேல கை போட்டு ராதிகா போட்டோ எடுத்து கொள்கிறாள். பிறகு தாத்தா அண்ணன் என அனைவரையும் மேடைக்கு அழைத்து அவர்களுடனும் போட்டோ எடுத்து கொள்கிறாள் இனியா. அனைவரும் பேசி கொண்டு இருக்கும் போது அம்மாவுக்கு என் மேல அக்கறையே இல்லை. ஒரு போன் கூட பண்ண முடியல என வருத்தப்படுகிறாள். நம்ம வீட்டுக்கு போறதுக்குள்ள பாக்கியா வீட்டுக்கு வந்து இருப்பாள் பாரு என தாத்தா சமாதானம் செய்கிறார்.
வீட்டுக்கு சென்றதும் அமிர்தாவிடம் ஸ்கூலில் நடந்த எல்லா விஷயங்களை பற்றியும் ஜெனி சொல்லிக்கொண்டு இருக்கும் போது அந்த சமயத்தில் இனியாவுக்கு வாழ்த்து சொல்வதற்காக பழனிச்சாமி அங்கே வருகிறார். அவரிடம் நடந்த அனைத்து விஷயங்களையும் கூற, பழனிசாமி நான் சென்று பார்த்து வருகிறேன் எனச்சொல்ல , தாத்தா நானும் வருகிறேன் என இருவரும் கிளம்புகிறார்கள்.
பாக்கியாவையும் மற்றவர்களையும் ரூமுக்குள் அடைத்து வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள்.பின்னர் நடந்த அனைத்து விஷயங்களையும் கேட்டறிந்து, இதைப் பேசி சரி செய்து விடலாம் எனக் கூறுகிறார் பழனிச்சாமி. அந்த இடத்தில் பழனிசாமிக்கு தெரிந்த ஒரு தம்பி அங்கே இருக்கிறார். அவரிடம் சென்று விசாரித்ததில் அவர் மாப்பிள்ளை வீட்டாரின் உறவினர் என்பது தெரிய வருகிறது. மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசி பார்க்கலாமா எனக் கேட்கையில், அவர்கள் பயங்கர கோபத்தில் இருக்கிறார்கள். அதனால் இந்தக் கல்யாணம் நடக்காது என அவர் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.