தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவுக்கு எதிராக நான்சியும் சேஷாத்திரியும் கை கோர்த்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, ராமும் சீதாவும் ரூமுக்குள் முதல் பங்க்ஷன் நடக்க போவதை நினைத்து சந்தோஷமாக பேசி கொண்டிருக்க இன்னொரு பக்கம் கல்பனா அர்ச்சனாவின் நகைகளை எடுத்து பார்த்து சந்தோசப்படுகிறாள். இவ்வளவு நகை இருக்கா என்று எல்லாத்தையும் எடுத்து போட்டு பார்த்து நகைகள் மீது ஆசைப்படுகிறாள்.


அடுத்து நைட் நேரத்தில் சுபாஷ் ரூமுக்குள் வந்ததும் அர்ச்சனாவை நெருங்க நினைக்க வாங்கிய அடி ஞாபகத்திற்கு வர பயந்து போகிறான். மறுநாள் காலையில் அர்ச்சனா மீண்டும் நகைகளை எடுத்து போட்டு பார்த்து கொண்டிருக்க சத்யா வந்து மடியில் படுத்து கொள்ள அவள் தூங்கிய பிறகு மீண்டும் நகைகளை எடுத்து பார்த்து கொண்டிருக்க சந்தியாவிற்கு சந்தேகம் வருகிறது.


சீதாவும் அர்ச்சனா கெட்டப்பில் இருக்கும் கல்பனா நகைகளை எடுத்து போட்டு பார்த்து கொண்டிருப்பதை பார்த்து சந்தேகத்துடன் என்ன பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்க கல்பனா பதில் சொல்ல முடியாமல் தவிக்க நான்ஸி அந்த இடத்திற்கு வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? கல்பனா சிக்கி கொள்வாளா? என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 






மேலும் படிக்க


Rituraj Singh: அஜித்தின் துணிவு படத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்!


Kagney Linn: 36 வயதில் தற்கொலை.. பிரபல பார்ன் நடிகை எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!