Karthigai Deepam: தீபாவுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு‌.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் கச்சேரியில் காத்துக் கொடுத்த ஊக்கத்தால் தீபா நல்லபடியாக பாடிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Continues below advertisement

அதாவது தீபாவின் பாடலைக் கேட்ட எல்லோரும் அவளிடம் ஆட்டோகிராப் வாங்கி கைகுலுக்கி சந்தோஷப்படுகின்றனர். இந்த வழியாக சென்ற மியூசிக் டைரக்டர் ஒருவரும் தீபாவின் குரலைக் கேட்டு கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்து உங்களுடைய குரல் ரொம்ப தெய்வீகமா இருக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டர் ஒரு பெரிய ப்ரொடக்ஷன்ல அடுத்து ஒரு படம் பண்ண கமிட் ஆகி இருக்கேன். அந்தப் படத்துல நீங்க தான் எல்லா பாட்டும் பாடி கொடுக்கணும் என்று சொல்ல தீபா மிகுந்த மகிழ்ச்சி அடைந்து கார்த்திக்கு நன்றி சொல்கிறாள். மேடையில் நன்றி சொன்னது மட்டுமின்றி கீழே இறங்கி வந்து கார்த்தியிடம் கைகூப்பி நிற்கிறாள்.

அடுத்ததாக கார்த்திகை தீப இருவரை வீட்டிற்கு வர மீனாட்சி அவர்களுக்கு திருஷ்டி எடுத்து பூசணிக்காய் சுற்றி வரவேற்கிறாள். பிறகு கார்த்திக் அபிராமி இடம் தீபா ரொம்ப நல்லா பாடினார்கள் ஒரு மியூசிக் டைரக்டர் படத்துல வாய்ப்பு கொடுத்து இருக்காங்க என்று சொல்ல அபிராமி அப்படியா சரிப்பா என்று பெரிதாக ரியாக்ட் செய்யாமல் பேசுகிறாள்.

அதன் பிறகு அபிராமி தீபாவை கூப்பிட்டு கோவிலுக்கு அழைத்துச் செல்ல அங்கு விளக்கு போட்ட பிறகு தீபாவை பார்த்த மக்கள் நீங்க பல்லவி தானே என்று ஒன்று கூடி விடுகின்றனர். கூட்ட நெரிசலில் அபிராமியும் கீழே தள்ளிவிட கையில் அடிபட்டு ரத்தம் வர தொடங்குகிறது.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க: Anna Serial: போதையில் தள்ளாடும் ஷண்முகம்.. மானத்தை வாங்கிய சௌந்தரபாண்டி - அண்ணா சீரியலில் இன்று!

Continues below advertisement
Sponsored Links by Taboola