சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal ) சீரியலின் நேற்றைய (பிப்ரவரி 19) எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனில் அடிபட்டு காயங்களுடன் வீட்டுக்கு வந்த மனைவிகளை மிகவும் அன்புடன் அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து பத்திரமாக பார்த்து கொள்கிறார்கள் குணசேகரன் தம்பிகள். தர்ஷினியை அப்படி குணசேகரன் தான் கடத்தி வைத்து ட்ராமா ஆடுகிறார் என்றால் இனி போலீசை நம்பி எந்த ஒரு பலனும் இல்லை என சக்தி சொல்ல அப்போ அதை விட பெரிய இடத்திற்கு தான் நாம் போக வேண்டும் என ஜனனி சொல்கிறாள். அனைவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.




குணசேகரன் தம்பிகள் அனைவரையும் அழைத்து வைத்து பேசுகிறார். அப்பத்தா கிழவி உங்க பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்த அனைத்து சொத்தையும் எனக்கு எழுதி கொடுக்க வேண்டும் என ஆர்டர் போடுகிறார். என்னுடைய தயவு இல்லாமல் என்னை பகைத்து கொண்டு நீங்கள் அனைவரும் எப்படி வாழ போகிறீர்கள் என நான் பார்க்க போகிறேன் என சவால் விடுகிறார்.

மேலும் தர்ஷினியை நானே தேடி கண்டுபிடித்துக்கொள்வேன். அவள் வந்ததும் எனக்கு என்னுடைய அப்பா மட்டும் போதும் என சொல்ல வைக்கிறேன் என மிகவும் ஆணித்தரமாக குணசேகரன் சொல்ல ஜனனி அவரை எதிர்த்து கேள்வி கேட்கிறாள். நீங்க தான் அப்போ தர்ஷினியை  கடத்தி வைச்சு இருக்கீங்களா? என கேட்க ஆவேசத்துடன் ஜனனியை பார்த்து முறைக்கிறார் குணசேகரன்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


 



எப்படி என்னை எதிர்த்து உங்களால் வாழ முடியும் என நான் பார்க்கிறேன் என குணசேகரன் தம்பிகளை பார்த்து நக்கலாக சிரிக்க "உங்க சவாலை எடுத்துக்கிட்டு உங்க கண்ணு முன்னால வளர்ந்து காட்டுறோம்" என சக்தி குணசேகரனை எதிர்த்து தைரியமாக சவால் விடுகிறார். அடுத்த அவரின் டார்கெட் கதிர் பக்கம் திரும்புகிறது. "என்ன கதிர்வேலன்? நீங்க என்ன சொல்றீங்க ?" என நக்கலாக கேட்க கதிர் கண்கலங்கி நிற்கிறான்.

அதற்கு தாரா சரியான பதிலடி கொடுப்பது போல "உங்க சொத்து உங்க காசு எதுவுமே எங்களுக்கு வேணாம்" என சொல்ல கதிருக்கு புத்துயிர் வருகிறது. அதை பார்த்து நந்தினி பெருமிதம் அடைகிறாள். ஒரு சின்ன பொண்ணு தன்னை எதிர்த்து பேசியதை தாங்கி கொள்ள முடியாத குணசேகரன் கோபத்தில் கொந்தளிக்கிறார்.


 





"என்னோட தங்கச்சி நிச்சயம் திரும்ப வருவா. எங்க அம்மாவை நாங்க வெளில கூட்டிட்டு வருவோம். இனிமேல் எனக்கு அப்பான்னு யாருமே  கிடையாது" என தர்ஷன் சொல்ல  டென்ஷனான விசாலாட்சி அம்மா 'வாயை மூடுடா" என தர்ஷனை திட்டுகிறார். அனைவரும் அவரை எதிர்த்து பேச நொந்துபோன குணசேகரன் அந்த இடத்தை விட்டு செல்கிறார். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.