அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பட நடிகை கேக்னி லின் கார்டர் (Kagney Linn Karter) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரைப் பிரபலங்களின் மறைவு
உலகளவில் இருக்கும் சினிமா பிரபலங்களுக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பின்பற்றும் அளவுக்கு வெறித்தனமான நபர்களாக உள்ளனர். அதனால் இத்தகைய பிரபலங்களின் பிரிவு என்பது ஒவ்வொருவரையும் சோகத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகிறது. தமிழ் சினிமாவை எடுத்தால் பல முன்னணி நடிகர், நடிகைகள் மரணத்தின்போது ஏதோ தங்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்வாக அனுசரிக்கும் அளவுக்கு அவர்கள் மீது ரசிகர்கள் பிரியம் வைத்திருப்பார்கள்.
இதில் சிலர் தற்கொலை செய்திருப்பார்கள். என்றோ ஒருநாள் அவர்களின் படங்கள், தகவல்களை எதிலாவது பார்க்கும்போது சற்று மனம் கனத்திருக்கும்.
நடிகை தற்கொலை
இப்படியான நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த கேக்னின் லின் கார்டர் 18 வயதினருக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் கவர்ச்சி படங்களில் நடிகையாக நன்கு பரீட்சையமானவர். எப்படி சன்னி லியோன், மியா கலிஃபா உலகம் அறிந்த கவர்ச்சி பட நடிகையாக வலம் வந்தார்களோ அவர்களை போல கேக்னினும் பிரபலமானவர். ஒரு கட்டத்தில் சன்னி லியோன், மியா கலிஃபா இருவரும் தங்கள் கடந்த கால வாழ்க்கையை நினைத்து வருத்தப்படுவதாக பல நிகழ்வுகளில் பேசியுள்ளனர்.
அப்படித்தான் சினிமாவில் நடிகையாக வலம் வர வேண்டும் என அதற்காக பாடுவது, நடனம் என அனைத்தையும் கற்றுக் கொண்டவர் கேக்னின் லின் கார்ட்டர். ஆனால் காலத்தின் கோலம் அவரை கவர்ச்சி பட உலகிற்குள் தள்ளியது. இந்த துறையில் படும் பாதிப்புகள் ஏராளம். மனம் மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்ததாக கூறப்படும் கேக்னின் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
2005 ஆம் ஆண்டில் இருந்து கவர்ச்சி படங்களில் நடித்து வந்த அவர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட தனக்கு மிகவும் பிடித்த நடனத்தில் கவனம் செலுத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஒஹியோவில் உள்ள ஸ்டூடியோவில் நடனம் ஆட தொடங்கிய பின் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்தி விட்டார் கேக்னின். அவரின் கடந்த கால வாழ்க்கை ஏற்படுத்திய பாதிப்பே தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் என கூறப்படுகிறது. அவரது உடலை கைப்பற்றி லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.