தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதி பாரதி நிச்சயம் ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க அறிவு & மணி சந்திப்பு நடக்காமல் மிஸ் ஆகிக் கொண்டே இருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


மணி - அறிவு சந்திப்பு:


அதாவது, ஆதி மற்றும் பாரதியை மாலை மாற்றிக் கொண்டு மோதிரம் போட சொல்ல இருவரும் மகிழ்ச்சியுடன் மாலை மாற்றிக் கொள்கின்றனர். பிறகு மோதிரம் மாற்றிக் கொள்கின்றனர். கடைசியாக தட்டை மாற்ற போகும் சமயத்தில் மணி வீட்டுக்கு வந்து விட அறிவு இவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மணியும் அறிவை பார்த்து அதிர்ந்து போகிறான். இருவரும் தனியாக பேசும் போது ஆதிக்கு இதயம் கொடுத்தது வாசு தான் என்ற உண்மை மொத்தமாக உடைகிறது.


இருப்பினும் நிச்சயம் நல்லபடியாக நடந்து முடிய எல்லோரும் வீட்டிற்கு கிளம்பி வருகிறார்கள். சாரதா ஆதிக்கு இதயம் கொடுத்த குடும்பத்தை நேரில் சந்தித்து பத்திரிக்கை வைக்க வேண்டும், பணம் கொடுத்து உதவ வேண்டும் என சொல்ல அறிவு அதெல்லாம் இப்போ எதுக்கு என்று கேட்க சாரதா தனது முடிவில் உறுதியாக இருப்பதாக சொல்லி விடுகிறாள்.


இதையடுத்து அறிவும் ஏற்பாடு செய்வதாக சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


 






மேலும் படிக்க


Vijayakanth: 4 வருஷத்துக்கு முன்னால் விஜயகாந்த் செய்த சம்பவம்.. நெகிழ்ந்து பேசிய விஜய பிரபாகரன்!


Nayanthara: எல்லாம் போச்சு.. இன்ஸ்டாகிராமில் புலம்பிய நயன்தாரா .. என்ன நடந்தது?