Nayanthara: எல்லாம் போச்சு.. இன்ஸ்டாகிராமில் புலம்பிய நயன்தாரா .. என்ன நடந்தது?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

Continues below advertisement

நடிகை நயன்தாரா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மீண்டும் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து கமல்ஹாசன் தவிர ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனிப்பட்ட கதைநாயகியாகவும் ஏராளமான படங்கள் நயன்தாரா செய்துள்ளார். இதனால் அவர் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிறார். 

இதனிடையே நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். 7 வருட காதலானது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் என்ற பந்தந்துக்குள் அடியெடுத்து வைத்தது. இந்த தம்பதியினர் தங்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டை குழந்தைகள் அதே ஆண்டில் அக்டோபர் 10 ஆம் தேதி பிறந்ததாக அறிவித்தனர். விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் குழந்தைகளோடு அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளும். 

இப்படியான நிலையில் சமீப காலமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே பிரச்சினை நிலவி வருவதாக தகவல் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனை பின்தொடர்வதை நிறுத்தினார். இது பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்றெல்லாம் வதந்தி பரவ ஆரம்பித்தது. 

ஆனால் இது விளம்பர யுக்தி என திரைத்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் சில மணி நேரத்திலேயே நயன்தாரா விக்னேஷ் சிவனை மீண்டும் ஃபாலோ செய்தார்.  இந்நிலையில் தற்போது "I'm Lost" என்ற வார்த்தையை வைத்து ஸ்டோரி ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட இருவரும் விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்தால் தான் சரியாகும் என இணையவாசிகள் தெரிவித்துள்ளனர். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola