தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாண்டியன் உடலை பார்த்து வீட்டில் எல்லோரும் அழுது கொண்டிருக்க ராமசந்திரன் மாலையுடன் வீட்டுக்கு வர இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


பதில் பேச முடியாத ராமச்சந்திரன்:


அதாவது, ராமசந்திரன் உடைந்து உட்கார பாண்டியன் உடலை எடுக்க போகும் சமயத்தில் மாலை போட வருகிறார். அப்போது ஒரு பெண்மணி பண்றதை எல்லாம் பண்ணிட்டு இப்போ நாடகம் போட வந்திருக்கியா என கேட்க ராமச்சந்திரன் பதில் பேச முடியாமல் நிற்கிறார்.


இதை பார்த்த வீரா அவரை ஒன்னும் சொல்லாதீங்க, அவர் பண்ண வேண்டியதை பண்ணிட்டார் என்று சொல்ல ராமசந்திரன் பாண்டியன் உடலுக்கு மாலை போட உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்கின்றனர்.


அடுத்து நடக்கப்போவது என்ன?


மறுபக்கம் மாறன் ஜெயிலுக்குள் இருக்க அப்பாவே பெத்த புள்ளையை போலீஸ்ல ஒப்படைச்சது இங்க தான் நடந்திருக்கிறது என்று சொல்ல எங்க அப்பா இப்படி தான், இதுவும் கெத்து தானே என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வீரா சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.






மேலும் படிக்க


Vijayakanth: 4 வருஷத்துக்கு முன்னால் விஜயகாந்த் செய்த சம்பவம்.. நெகிழ்ந்து பேசிய விஜய பிரபாகரன்!


Siragadikka Aasai : போலீசிடம் மாட்டிய முத்து.. பயந்துபோன மீனா-சிறகடிக்க ஆசையில் இன்று !


Ajithkumar: தனியார் மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி