சிறகடிக்க ஆசையில் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


ரோகினி விஜயாவுக்கு ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டு இருக்கிறார். அப்போது மீனா  வருகிறார். "என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க" என கேட்கிறார் மீனா, அதற்கு விஜயா, க"டலை மாவையும் மைதா மாவையும் பூசிக்குறவ அவ அவளுக்கு இதை பத்தி என்ன தெரியும்? என சொல்கிறார்.  அதற்கு மீனா "காய்கறி சாப்பிட்டு நிறைய தண்ணீர் குடிச்சாலே முகம் நல்லா இருக்கும்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க" என்கிறார். அப்போது விஜயா மீனாவை கிண்டலடிக்கிறார்.


ஸ்ருதியும் ரவியும் ஏசிக்காக சண்டைப் போட்டுக் கொள்கின்றனர். இருவரும் மாறி மாறி ஏசியை ஆன் செய்து ஆப் செய்கின்றனர். அப்போது கரண்ட் கட் ஆகின்றது. அப்போது விஜயா எழுந்து ஃபேஸ் பேக்குடன் ஹாலுக்கு வருகிறார். வீட்டில் இருக்கும் அனைவரும் விஜயாவை பார்த்து பயந்து விடுகின்றனர். அப்போது ”எல்லோருர் வீட்லயும் கரண்ட் இருக்கு. நம்ம வீட்ல மட்டும் தான் கரண்ட் கட் ஆகி இருக்கு” என மீனா சொல்கிறார். 


முத்துவும் மீனாவும் ஆட்டோவில் பூ வாங்குவதற்காக சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ஆட்டோவை முத்து நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தியதற்காக போக்குவரத்து போலீஸ் அபராதம் விதிக்கிறார். அந்த போலீஸ் உடன் மீனா வாக்குவாதம் செய்கிறார். ”நீ சவாரி தானம்மா வந்த ஏதோ இவரோட பொண்டாட்டி மாதிரி சண்டைப் போடுற?” என டிராபிக் போலிஸ் கேட்கிறார்.  பின் மீனா 500 ரூபாய் அபராதம் செலுத்துகின்றார். பின் இருவரும் அங்கிருந்து புறப்படுகின்றனர். 


விஜயா, ஆழ்ந்த சிந்தனையில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அப்போது அண்ணாமலை அங்கு வருகிறார். அப்போது அவர் அண்ணாமலையிடம் ரவியும் ஸ்ருதியும் ஏசியை ஆன் செய்து ஆஃப் செய்ததால் தான் பவர் ட்ரிப் ஆனதாக அண்ணாமலையிடம் செல்கிறார். நாம அப்போ அவங்க சண்டைப் போடும் போதே இதை பத்தி கேட்டு இருக்கணும் என்கிறார் விஜயா. போக போக சரியாகிடும் என அண்ணாமலை செல்கிறார். உனக்கும் ரவிக்கும் எதாவது சண்டையா என விஜயா ஸ்ருதியிடம் கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.