தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் வைத்து இசக்கி முத்துபாண்டியிடம் வாழ்வதாக அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அதாவது, பஞ்சாயத்துக்கு நடக்கும் நேரத்தில் ஜெயிலில் இருக்கும் சூடாமணிக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்று சாக போய் கடைசியாக கண் விழிக்கிறாள். அடுத்து வீட்டிற்கு வந்த ஷண்முகம் இனிமே இந்த வீட்டில் யாரும் இசக்கியை பற்றி பேச கூடாது. அவளுக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறான். 


இந்த நேரம் பார்த்து இசக்கியும் பாக்கியமும் ஆட்டோவில் வந்து இறங்க உள்ளே வர விடாமல் தடுத்து நிறுத்தும் ஷண்முகம் இசக்கியின் துணிகளை தூக்கி வெளியே போட்டு கொளுத்துகிறான். இனிமே ஓட்டும் இல்ல உறவும் இல்ல என்று சொல்ல இசக்கி கண்ணீருடன் வெளியேறுகிறாள். 


அடுத்து பாக்கியம் அவளை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்ல ரூமுக்குள் சென்ற இசக்கி ரத்தனாவோட வாழ்க்கைக்காகவும் நீ கொலைகாரனாக ஆகிட கூடாது என்பதற்காகவும் தான் இப்படியொரு முடிவை எடுத்தேன், இதை நான் பிடித்து எடுக்கல என்று கலங்கி அழ சிவபாலன் இதை கேட்டு விடுகிறான். 


உடனே அவன் ரூமுக்குள் வர இசக்கி அழுகையை அடக்கி கொண்டு எதுவும் காட்டி கொள்ளாமல் இருக்க சிவபாலனும் எதையும்  கேட்காதது போல் இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 


மேலும் படிக்க 


Ninaithen Vanthai :ஸ்கெட்ச் போட்ட குழந்தைகள்.. வாண்டடாக சிக்கிய மனோகரி - நினைத்தேன் வந்தாய் எபிசோட் அப்டேட்!


Karthigai Deepam :கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.. தீபாவுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்


Ethirneechal : கோர்ட்டுக்கு வந்த சாருபாலா: அதிர்ச்சியில் உறையும் குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று!