சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல்  (Ethirneechal ) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 14 ) எபிசோடில் ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகாவை நினைத்து சங்கடப்படுகிறாள் ஈஸ்வரி. தர்ஷினியை தன்னுடைய மகளாக நினைக்கும் இவர்களும் என்னுடன் சேர்ந்து இப்படி கஷ்டப்பட வேண்டுமா என வருத்தப்படுகிறாள். பின்னர் இன்ஸ்பெக்டரிடம் சென்று ஜீவனாந்ததோடு இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும் என கேட்டு பேசுகிறாள். அவளின் மனக்குமுறலை பற்றி சொன்னதும், ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு பிளான் ஒன்றை சொல்கிறார். நான் சொல்வது போல கோர்ட்ல போய் சொல்லுங்கள் என ஏதோ சொல்கிறார். அதை கேட்டு கொள்கிறாள் ஈஸ்வரி. 


 



அடுத்த நாள் காலை குணசேகரன் கோர்டுக்கு கிளம்புகிறேன் என விசாலாட்சி அம்மாவிடம் சென்று ஆசீர்வாதம் வாங்க தம்பிகள் அனைவரும்  அங்கே வந்து நியாயம் கேட்கிறார்கள். மருமகள்களை எல்லாம் ஜெயிலில் சித்திரவதை அனுபவிக்கிறார்கள் ஆனால் நீ மகனுக்கு கேஸில் வெற்றிபெறணும் என ஆசீர்வாதம் செய்கிறாயா என ஆவேசப்படுகிறார்கள். 


குணசேகரன் சிறு வயது முதல் உழைத்து குடும்பத்தை காப்பாற்றிய அதே கதையை சொல்லி அது நல்லதோ கெட்டதோ நான் என்றுமே அவன் பக்கம் தான் இருப்பேன் என விசாலாட்சி அம்மா சொல்கிறார். கதிர் உண்மையை உடைத்து சொல்கிறேன் என சொல்லி நந்தினியால் நடக்க கூட முடியவில்லை, சேர்ந்தார் போல் இரண்டு வார்த்தை கூட பேச முடியவில்லை. இப்போது இதை கேட்டுட்டு நீ சந்தோஷப்படு என ஆவேசமாக கத்திவிட்டு செல்கிறான். அவனோடு சக்தியும், ஞானமும் செல்கிறார்கள். 


விசாலாட்சி அம்மா குணசேகரனை தடுக்க முயற்சி செய்யதாலும் அவரால் மகனை எதிர்த்து பேசமுடியாமல் அழுது புலம்புகிறார். கடவுள் தான் என்னுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என கதறுகிறார். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 


 



அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


கோர்ட்டுக்கு வரும் குணசேகரனிடம் கதிர் சண்டைக்கு செல்கிறான். அதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார். அவனை ஞானம் சமாதானம் செய்து வைக்கிறான். குணசேகரன் உடன் வந்த அவரது ஆட்கள் சிலர் ஏத்தி விடும்படி பேசுகிறார்கள். "அண்ணன் தம்பிகுள்ள இருக்குற சண்டையை பெருசாக்கலாம் என பாத்தீங்களா?" என சக்தி அவர்களை பார்த்து கேட்க "யாருடா அண்ணன் தம்பி?" என குணசேகரன் எகிறிக்கொண்டு செல்கிறார். 


பெண்கள் அனைவரையும் கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள் போலீஸ்காரர்கள். அவர்களை இழுத்து செல்வதை குணசேகரன் பார்த்து கொண்டு இருக்க ஈஸ்வரி அவரை பார்த்து முறைக்கிறாள். 


 


 



"இப்போ உங்களுக்கு சந்தோஷமா?  பாத்தீங்களா எப்படி நடக்க முடியாம பண்ணி இருக்காங்கனு?" என குணசேகரனை பார்த்து கதிர் கத்துகிறான். கேஸ் ஆரம்பித்ததும் சாருபாலா, பெண்கள் தரப்பு வக்கீலாக உள்ளே வருவதை பார்த்து ஈஸ்வரி மற்றும் ஜனனி ஒரு பக்கம் அதிர்ச்சி அடைய, குணசேகரனுக்கு அது பேரதிர்ச்சியாக இருக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ஹிண்ட்.