முத்து, ப்ரெளன் மணியிடம், "ஃபாரின்ல இருந்து வரவங்க செண்ட், சரக்கெல்லாம் எடுத்துட்டு வருவாங்களாம். நீங்க எடுத்துட்டு வந்திங்களா?" என கேட்கிறார். 5 பாட்டில் எடுத்துட்டு வந்ததாகவும் 2 பாட்டில் மட்டுமே எடுத்து வர அனுமதி என்பதால் ஏர்போட்டில் தன்னை பிடித்து விட்டதாகவும் ப்ரெளன் மணி சொல்கிறார். "எனக்கு நம்ம ஊரு நாட்டு சரக்குதான்பா பிடிக்கும் கிடைக்குமா?" என முத்துவிடம் கேட்கிறார் ப்ரெளன் மணி. முத்து சரக்கு ஏற்பாடு செய்கிறார். 


ப்ரெளன் மணி முத்துவின் நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துகின்றனர். ப்ரெளன் மணி குடித்துவிட்டு உளறுகிறார். இவனுங்க மணி கணக்கா விடிய விடிய குடிப்பானுங்க வாங்க போலாம் என்கிறார் மனோஜ். ப்ரெளன் மணி மனோஜை வலுக்கட்டாயமாக உட்கார வைத்து சரக்கை வாயில் ஊற்றி விடுகிறார். மனோஜ் வாய் எரிவதாக கூறி துடிதுடிக்கிறார். எதுக்கு அவனுக்கு சரக்கு ஊத்தி விட்டிங்க என முத்து ப்ரெளன் மணியிடம் கேட்கிறார். 


அதற்கு அவர் முதல் நாள் ஆட்டு கறி வெட்டும் போது கை நடுங்கும் அப்றம் போக போக பழகிடும் என  சொல்கிறார். அதற்கு முத்து "ஏங்க மாமா வந்ததுல இருந்து கறிக்கடைக்காரன் மாதிரியே பேசுறியே மலேசியாவுல உனக்கு எந்த எடம், உன் அட்ரஸ் என்ன?' என்று கேட்கிறார். அதற்கு அவர், “மலேசியாவே நம்மல்துதான், ஊர் புல்லா பிஸ்னஸ் என்கிறார்.  நான் யாரு தெரியுமா? என் ஊரு என்னனு தெரியுமா என கேட்கிறார். முத்து ஆர்வமாக சொல்லு சொல்லு என கேட்கிறார். அதற்குள் ப்ரெளன் மணி மயங்கி விடுகிறார்.  முத்து ப்ரெளன் மணி யார் என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்தும் ப்ரென் மணி அதை சொல்லாமல் ஏதேதோ உளறுகிறார். 


மனோஜ் போதையில் நடந்து சென்று சுவற்றில் முட்டிக் கொண்டு கீழே விழுந்து விடுகிறார். போதையில் இருக்கும் மனோஜை முத்து எழுப்பி தன் நண்பர்களுடன் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். மனோஜ் சிலை போல் நடந்து செல்கிறார். முத்து  வீட்டிற்கு சென்றதும், மனோஜை ஒரு சேரில் உட்கார வைக்கிறார். விஜயாவும், ரோகினியும் ஓடி வந்து ”மனோஜ் என்ன ஆச்சி ஏன் இப்படி இருக்க” என கேட்கின்றனர். மனோஜ் எதுவும் பேசாமல் ஒரு சிலை போல் அமர்ந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து விஜயா பதறி போகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 


மேலும் படிக்க 


Radikaa Sarathkumar: “ரொம்ப அருவருப்பா இருக்கு” - ராதிகாவை அலறவிட்ட படம்.. எது தெரியுமா?


Watch Video: அயோத்தியில் ராமர் கோயில், மசூதி கட்டி என்ன பிரயோஜனம்? - ரஜினியின் பழைய வீடியோ வைரல்