Veera Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வீரா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராமச்சந்திரனின் சித்தப்பா வீராவை வாழ்த்தி விட்டு கிளம்பி சென்ற நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, ராமசந்திரன் "என்னுடைய மருமகளை நான் என் வீட்டிற்கு கூட்டிட்டு போறேன்" என்று சொல்கிறார். அடுத்து மாறன் வீராவிடம் சென்று "என்ன நீ முதல்ல என் அப்பாவை உன் கைக்குள்ள போட்டுக்கிட்ட, இப்போ என் தாத்தாவையும் உன் பக்கம் இழுத்துட்ட" என்று கேட்க, "நான் யாரையும் இம்ப்ரெஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணல" என்று சொல்கிறாள். 


அடுத்து கண்மணியுடன் வீரா குடும்பத்தினரும் ராமசந்திரன் வீட்டிற்கு கிளம்ப, கண்மணி அண்ணன் மற்றும் தனது காதலன் ராஜேஷ் போட்டோ முன்பு விளக்கேற்றி சாமி கும்பிடுகிறாள். இதையடுத்து எல்லாரும் கிளம்பியதும் கண்மணி "நான் அந்தக் குடும்பத்தை பழி வாங்க தான் போறேன்" என்று மைண்ட் வாய்ஸில் பேசி கொள்கிறாள். 


இதனைத் தொடர்ந்து ராமசந்திரன் வீட்டிற்கு எல்லாரும் வந்து சேர்ந்ததும் கண்மணி விளக்கேற்ற மாறனின் அம்மா போட்டோ கீழே விழுந்து உடைய அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். வள்ளி “இவ வந்த நேரமே சரியில்ல, அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆன போதும் அண்ணி போட்டோ விழுந்து உடைந்தது, இன்னைக்கும் அப்படியே நடக்குது அண்ணி ஏதோ சொல்ல வராங்க” என்று பேச, ராமசந்திரன் “மாறன் தானே தினமும் மாலை போடுறான், அவன் போட்டோவை சரியா மாட்டி இருக்க மாட்டான்” என்று திட்டுகிறார். 


இதையடுத்து வள்ளி மாறனிடம் போட்டோ உடைந்தது பற்றிப் பேசி கண்மணியை பற்றி தப்பாக சொல்ல, அவன் “அண்ணியை பார்த்தா நல்லவங்க மாதிரி தான் தெரியுது” என்று சொல்கிறான். இதனைத் தொடர்ந்து உடைந்த அம்மாவின் போட்டோவைத் தேட போட்டோ அங்கு இல்லாததால் வள்ளியிடம் விசாரிக்க, “வீரா தான் கடைசியா போட்டோவை பார்த்திட்டு இருந்தா” என்று சொல்கிறாள். 


உடனே மாறன் வீராவிடம் “அம்மா போட்டோவை பார்த்தாயா?” என்று கேட்க, அவள் “எனக்குத் தெரியாது” என்று சொல்ல, மாறன் வெளியே வந்ததும் வீரா பிரேம் போட்ட போட்டோவை மாட்டி மாலை போட, மாறன் அதைப் பார்த்து சந்தோசப்படுகிறான். இப்படியான நிலையில் இன்றைய வீரா சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Mohanlal Networth: தலை சுற்றவைக்கும் மாலிவுட் கிங் மோகன்லாலின் சொத்து மதிப்பு.. சொகுசு கார்கள்.. முழு விவரம்!


Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்