Maari Serial Written Update: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சூர்யா மாரியிடம் அப்பாவை நான் தான் கடத்தினேன் என்ற உண்மையை சொன்ன நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 


அதாவது, தாரா ஜெகதீஷை யார் கடத்தி இருப்பாங்க என்று குழப்பம் அடைகிறாள். மறுபக்கம் சூர்யா மாரியிடம் “அம்மா அப்பாவை தேடிட்டே இருப்பாங்க, அவங்களுக்கு மட்டும் அப்பா எங்க இருக்காருன்னு சொல்லிடலாம்” என்று பேச, மாரி “வேண்டாம் ஹஸ்பண்ட் சார். அவங்களுக்கு தெரிந்தால் மாமா உயிருக்கு பிரச்சனை” என்று சொல்கிறாள். 


“அவங்க கிட்ட சொன்னா உடனே மாமாவை பார்க்கணும்னு சொல்வாங்க, அவங்களை கூட்டிட்டு போகும் போது  அம்மா எதிரிங்க யாராவது அதைப் பார்த்துட்டா மாமாவுக்கு பெரிய பிரச்னையாகிடும்” என்று சமாளிக்கிறாள். சூர்யாவும் மாரி சொல்வது சரியாக தோன்றுவதாக மனதை மாற்றி கொள்கிறான். 


அடுத்து தாரா ரவுடிகளை சந்தித்து ஜெகதீஷ் இருக்கும் இடத்தைத் தேடி கண்டுபிடிக்க சொல்கிறாள். “ஜெகதீஷ் மட்டும் கண்ணைத் திறந்து உண்மையை சொல்லிட்டா நம்ம கதை முடிந்தது” என்று பயப்படுகிறாள். அடுத்து சூரியாவும் மாரியும் ஸ்ரீஜா வீட்டிற்கு வந்து ஜெகதீஷை சந்திக்கின்றனர். ஸ்ரீஜா “தினேஷ் நீங்க எப்ப வேணாலும் இங்க வரலாம், என்ன உதவி வேணும்னாலும் கேட்கலாம்” என்று சொல்கின்றனர். 


சூர்யா, “அப்பாவைத் தொடர்ந்து இதே வீட்டில் வச்சிக்கறதும் பாதுகாப்பு கிடையாது, அடிக்கடி அவரை இடம் மாத்திக்கிட்டே இருக்கணும்” என்று சொல்லி புது இடத்திற்கு மாற்றுகிறான். மறுபக்கம் குண்டடிபட்ட மார்க் ஆன்டனி வலியால் துடிக்க, சங்கரபாண்டி நர்ஸை உதவிக்கு கூப்பிட, அவள் கண்டிப்பா டாக்டர் கிட்ட தான் கட்டணும் என்று சொல்கிறாள். 


அதே போல் மறுபக்கம் இடம் மாற்றப்பட்ட ஜெகதீஷூக்கு திடீரென ரத்தம் கசிய, சூர்யா பதறிப் போய் காரில் தூக்கி போட்டு ஹாஸ்பிடல் கொண்டு செல்கிறான். மார்க் ஆண்டனியுடன் சங்கரபாண்டி, ஜெகதீஷுடன் சூர்யா என இருவரும் ஒரே ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர். இப்படியான நிலையில் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Mohanlal Networth: தலை சுற்றவைக்கும் மாலிவுட் கிங் மோகன்லாலின் சொத்து மதிப்பு.. சொகுசு கார்கள்.. முழு விவரம்!


Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்