Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.
குறி சொல்கிறவர் முத்துவின் கையை பார்த்து விட்டு "உன் வாழ்க்கையில நிறைய மாற்றங்கள் வரப்போகுதுப்பா" என்று சொல்கிறார். மேலும் "மற்ற நாட்களை விட இன்னைக்கு நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். கண்ணும் கருத்துமா இருக்கணும்" என்று அவர் சொல்கிறார். பின் முத்துவுக்கு ஏற்கனவே 500 மாலை ஆர்டர் கொடுத்த அரசியல்வாதி கால் பண்ணி நேரில் வர சொல்கிறார்.
மீனா தன் அம்மாவைப் பார்க்க செல்கிறார். அங்கு சத்யாவும் சிட்டியும் ஒன்றாக இருக்கின்றனர். உடனே மீனா சத்யாவைப் பார்த்து "உனக்கெல்லாம் எத்தனை டைம் சொன்னாலும் புத்தியே வராதாடா? இந்தத் திருட்டு பையன் கூட சேராதன்னு சொன்னா கேட்குறியா?" எனக் கேட்கிறார். சிட்டி முத்துவைக் குறிப்பிட்டு "அவரு அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய குடிகாரன்லாம் இல்ல" என்று சொல்கிறார். மீனா சிட்டியை அடிக்க கை ஓங்குகிறார். சத்யா மீனாவைத் தடுக்கின்றார். உடனே மீனாவின் அம்மா "என்னடா கண்டவனுக்காக அக்காவ எதிர்த்து பேசுற? வளர்ந்துட்டியேனு பார்க்குறேன்" என்று சொல்கிறார்.
முத்து அந்த அரசியல்வாதியிடம் செல்கிறார். அந்த அரசியல்வாதி தன் நண்பருக்கு கார் வாங்க வேண்டும் எனக்கூறி ஒரு நல்ல காரை பார்த்து தரச் சொல்கிறார். முத்துவும் அவர்களுடன் கார் ஷோ ரூம் செல்கிறார். அங்கு மனோஜூம், ரோகிணியும் கார் வாங்க வருகின்றனர். மனோஜ் செலக்ட் செய்து வைத்திருந்த காரையே முத்துவும் செலக்ட் செய்கிறார். பின் மனோஜ் “இந்தக் கார் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நான் தர மாட்டேன்” என்று அடம் பிடிக்கின்றார்.
பின் டீலரும் மனோஜை வேற காரை பார்க்க சொல்லி சமாதானம் செய்கிறார். இதனால் மனோஜும் ரோகிணியும் கார் வாங்காமல் சென்று விடுகின்றனர். இந்த ராஸ்கல் இப்டி பண்ணிட்டான் என்று மனோஜ் ஆதங்கப்படுகிறார். அதற்கு ரோகிணி "விடு, மனோஜ் நமக்கு ஒரு டைம் வரும்" என்று சொல்கிறார். நாளைக்கு காரை டெலிவரி எடுத்துக்கலாம் என்று அந்த அரசியல்வாதி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க
Praveen Kumar : மேதகு படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்