ஐஸ்வர்யா ரஜினிகாந்த்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர். தனுஷ்  நடித்த 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஐஸ்வர்யா. தொடர்ந்து கெளதம் கார்த்திக் இயக்கத்தில் வை ராஜா வை படத்தை இயக்கினார். இந்த ஆண்டு விஷ்ணு விஷால் ரஜினிகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய லால் சலாம் படம் வெளியானது.


இந்து முஸ்லிம் சமத்துவத்தை வலியுறுத்தும் கருத்துக்களை இப்படத்தில் அவர் கையாண்டிருந்தார். லால் சலாம் படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.


திருமண முறிவுக்குப் பின் தந்தையுடன் வசித்து வந்த ஐஸ்வர்யா






நடிகர் தனுஷுடன் திருமண உறவை முடித்துக்கொள்ள முடிவு செய்த ஐஸ்வர்யா போயஸ் கார்டனில் இருக்கும் தனது தந்தையுடன் வசித்து வந்தார். யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய அவரது இரு மகன்களும் அவருடன் வசித்து வந்தார்கள். இப்படியான நிலையில் சென்னையில் கடற்கரை ஓரமாக தனக்கேன சொந்தமாக ஒரு வீட்டை வாங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இந்த வீட்டிற்கான உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த வீட்டின் கிரஹபிரவேசம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் வருகை தந்து தங்கள் மகளை வாழ்த்தியுள்ளார்கள்.


இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


வேட்டையன் & கூலி


 நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். த.செ ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை நடைபெற்று வருகிறது , பிரம்மாண்டமான செட் அமைத்து மாஸான பாடல் ஒன்று தற்போது எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் இணைய இருக்கிறார் ரஜினி . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐமேக்ஸ் கேமராவில் படம் பிடிக்கப் பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது , கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது