Maari Serial: மீண்டும் மாரியிடம் வந்து சேர்ந்த குழந்தை.. குழப்பத்தில் தவிக்கும் தாரா - மாரி சீரியல் அப்டேட்!

Maari Serial Written Update: மாரி “சாஸ்திரி குழந்தைக்கு பேர் வச்சது என்னுடைய குழந்தைக்கு பேர் வச்ச மாதிரி இருக்கு” என்று சொல்ல சூர்யா தனக்கும் அப்படி ஒரு உணர்வு தான் இருக்கிறது என்று சொல்கிறான்.

Continues below advertisement

Maari Serial Written Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தாரா புடவையில் எப்படி தீப்பற்றியது எனத் தெரியாமல் குழம்பிக் கொண்டிருக்க இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

Continues below advertisement

அதாவது ஒரு பக்கம் தாரா புடவையில் தீப்பற்ற “அங்க எந்த பொருளுமே இல்ல அப்படி இருக்கும்போது இது எப்படி நடந்தது” என்று சாஸ்திரி கொண்டு வந்த குழந்தையின் மீது சந்தேகப்படுகிறாள். “ஒரு வேல அது மாரியோட குழந்தையா இருக்குமோ” என்று யோசிக்கிறாள். 

மறுபக்கம் மாரி “சாஸ்திரி குழந்தைக்கு பேர் வச்சது என்னுடைய குழந்தைக்கு பேர் வச்ச மாதிரி இருக்கு” என்று சொல்ல சூர்யா தனக்கும் அப்படி ஒரு உணர்வு தான் இருக்கிறது என்று சொல்கிறான். பிறகு தாரா அதே மாதிரி குழந்தையாக இருக்க வாய்ப்பு இருக்கு என்று நினைத்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள முடிவெடுக்கிறார். 

அடுத்து சங்கரபாண்டியுடன் சாஸ்திரி இருக்கும் வீட்டை தேடிக் கண்டுபிடிக்க வீடு பூட்டு இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர் வந்து என்ன விஷயம் என்று விசாரிக்க, சாஸ்திரியை பார்க்க வந்ததாக, சொன்ன அவர் ஊருக்கு கிளம்பி போயிட்டார் என்று சொன்னது தாராவும் சங்கரபாண்டியும் ஷாக் ஆகின்றனர். 

“சக்கரபாண்டி பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன் என எல்லா இடத்திலும் தேடலாம்” என்று சொல்ல தாரா, “அவங்க கிளம்பி ரொம்ப நேரம் ஆகும் போல, எங்கேயும் தேடி பயன் கிடையாது” என்று சொல்லி வீட்டிற்கு வருகிறாள். 

அடுத்து சாஸ்திரி குழந்தையுடன் தாரா வீட்டுக்கு வந்து இறங்குகிறார். “நான் அவசர வேலையா ஊருக்கு போறேன், எனக்கு இந்த ஊர்ல வேற யாரையும் தெரியாது. அதனால எனக்கு இந்த உதவியை மட்டும் பண்ணுங்க, குழந்தையை ஊருக்கு அடிக்கடி கொண்டு போயிட்டு இருக்க முடியாது, நான் வரவரைக்கும் பார்த்துக்கொள்ள முடியுமா?” என்று கேட்க, “மாரி இதில் என்ன இருக்கு? ஒரு பிரச்சனையும் இல்ல. நான் குழந்தையை பார்த்துக்கிறேன்” என்று வாங்கிக் கொள்கிறாள். 

தேவி அம்மா மீண்டும் மாரியிடம் வந்து சேர இத்துடன் இன்றைய மாரி சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Ajith: உழைப்பாளிக்கு வாய்ப்பு தந்த உழைப்பாளி! எஸ்.ஜே.சூர்யா முதல் முருகதாஸ் வரை: அஜித்தை வாழ்த்திய இயக்குநர்கள்!

Siragadikka Aasai Serial: முத்துவின் சந்தேகம்.. மனோஜிடம் ஏமாற்றி பணத்தை வாங்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசையில் இன்று!

Continues below advertisement