Sandhya Ragam :ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய மாயா, தனம்.. ஜானகிக்கு காத்திருந்த ஷாக் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்

சந்தியா ராகம் சீரியலின் இன்றைய அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சத்தியா ராகம்.

Continues below advertisement

இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ஆட்டோ டிரைவரை துரத்திச் சென்று ரகுராமிடம் மாயாவும் தனமும் சிக்க இருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது இவர்கள் இருவரும் ஒரு வழியாக ரகுராமிடமிருந்து தப்பி விடுகின்றனர். மறுபக்கம் கோவிலில் உட்கார்ந்து இருக்கும் பத்மாவும் பார்வதியும் என்ன செய்வது என தெரியாமல் வருகின்றனர்.

அதன் பிறகு பக்கத்தில் இருப்பவர்களிடம் போனை வாங்கி ஜானகிக்கு போன் போட்டு மாயாவும் தனமும் காணவில்லை முதலில் அந்த மாயாவ ஊருக்கு அனுப்பி விடு என்று சொல்ல ஜானகி அதிர்ச்சி அடைகிறாள்.

பக்கத்தில் இருக்கும் ரமணியம்மா என்ன என்று கேட்க ஒன்றும் இல்லை என சொல்லி சமாளித்து விடுகிறார். அதன் பிறகு ரகுராமும் வீட்டுக்கு வர மாயாவையும் தனத்தையும் காணவில்லை என்று தெரிய வர எல்லோரும் பதற்றம் அடைகின்றனர்.

பிறகு இருவரும் வீட்டுக்கு வந்ததும் ரகுராம் எங்கே போனீங்க என்று கேட்க ஷாப்பிங் போனதாக சொல்ல அவர் ஜானகியை முறைக்கிறார். பிறகு மேலே ரூமுக்கு வந்த மாயா அம்மா கிஃப்ட்டாக கொடுத்த ப்ளூடூத் ஸ்பீக்கரை வைத்து இதில் பாட்டை கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகமாகவே இருக்கு என வருத்தப்படுகிறார்.

இந்த சமயம் பார்த்து கீழே கார் ஒன்று வந்து நிற்க அதிலிருந்து இறங்குபவர்கள் ரகுராம் இருக்காரா நாங்க ஜீ டிவியில் இருந்து வருகிறோம்‌. ஸ்மார்ட்போனால நல்லதா கெட்டதா என்று பேட்டி எடுக்க வந்திருப்பதாக சொல்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன? பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ரகுராம் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க

Premalatha Vijayakanth : ’பொருளாளர் - பொதுச்செயலாளர்’ பிரேமலதா விஜயகாந்த் அரசியல்வாதியான கதை..!

Udhayanidhi Stalin: அசுர வளர்ச்சி.. அமைச்சராக உதயநிதி பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு! செயல்பாடுகள் என்னென்ன?

IPS Transfer : திண்டுக்கல், கள்ளக்குறிச்சிக்கு புது எஸ்.பி.க்கள் நியமனம்! காவல்துறை உயரதிகாரிகள் அதிரடி மாற்றம்!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola