தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.


இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றியும் ஷக்தியும் சேர்ந்து ரங்கநாயகி ப்ளான் அனைத்தையும் மாற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, சரண்யா வெளியே வந்தால், எல்லாரும் அசோக் எங்கே என்று கேட்பார்கள் என்பதால் அவளை வீட்டுக்குள்ளே இருக்கும்படி ரங்கநாயகி சொல்கிறாள். பூஜா சரண்யாவை ஒரு அறையில் போட்டு பூட்டி வைக்கிறாள்.


அடுத்து மீனாட்சி யமுனா மற்றும் துர்கா அங்கே வர, ரங்கநாயகி, நீதிமணி வர்ற வரை வெளியவே இருங்க என்று சொல்லி விடுகிறாள். பிறகு நீதிமணி புஷ்பாவுடன் வருகிறான்.


இதை பார்த்து மீனாட்சி அதிர்ச்சியாக, ரங்கநாயகி மீனாட்சியை பூடகமாக அவமானப்படுத்துகிறாள். உடன் சேர்ந்து புஷ்பாவும் அவமானப்படுத்த, அங்கே சக்தியும் வெற்றியும், மேள தாளத்துடன் கலர் ஜிகினா பறக்க பைக்கில் வருகிறார்கள்.


இதை பார்த்ததும் இவ எதுக்கு இங்க வருகிறாள் என்று ரங்கநாயகி அதிர்ச்சியாகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


மேலும் படிக்க 


Udhayanidhi Stalin: அசுர வளர்ச்சி.. அமைச்சராக உதயநிதி பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு! செயல்பாடுகள் என்னென்ன?


Premalatha Vijayakanth : ’பொருளாளர் - பொதுச்செயலாளர்’ பிரேமலதா விஜயகாந்த் அரசியல்வாதியான கதை..!


CM Letter: மிக்ஜாம் புயல் பாதிப்பு: கடன் தவணையை நீட்டிச்சு அறிவிங்க.. நிதியமைச்சருக்கு முதல்வர் கடிதம்..